கோதுமை ரவா தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. இது உடனடியாகவும் தயாரிக்கப்படலாம்.
இந்த செய்முறை மிருதுவான கோதுமை ரவா தோசை அளிக்கிறது, மேலும் இது கோதுமை ஊத்தப்பம் செய்ய பயன்படுகிறது. ஒரு மெல்லிய ரவா தோசை பெற, அரிசி மாவை குறைவாக பயன்படுத்தவும். நீங்கள் மாவு கரைக்கத் தண்ணீர் பயன்படுத்தலாம், அல்லது மாவு பிணைப்பதற்காக மோர் பயன்படுத்தலாம்.
கோதுமை என்றுமே சத்தான உணவு. பஞ்சாபிகளின் முதன்மையான உணவான கோதுமை, தற்போது தென்மாநில மக்களிடமும் தனியிடம் பிடித்து வருகிறது. பொதுவாக பலருக்கும் தெரிந்த இந்த குணங்களைத் தவிர சிறப்புத் தன்மைகள் பல நிறைத்து கோதுமை. முதுகுவலி, முட்டுவலியில் அவதிப்படுபவர்கள் கோதுமையை வறுத்துப் பொடித்து, அதனுடன் தென் சேர்த்து உட்கொள்ள , அந்த வலி குணமாகும். கோதுமை அனைத்து காலத்திற்கும் ஏற்ற உணவு.
கோதுமை ரவா தோசை
Ingredients
- 3/4 கப் கோதுமை மாவு
- 1/4 கப் அரிசி மாவு
- 1/2 கப் ரவை
- 1 கரண்டி புளித்த மோர்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- சிறு துண்டு இஞ்சி
- கொஞ்சம் கொத்தமல்லி
- கொஞ்சம் கறிவேப்பிலை
- தேவையான அளவு ஆயில்
- தேவையான அளவு உப்பு
Instructions
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணிர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லைப் போட்டு சூடானதும், சிறிது எண்ணெயைத் தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும்.
- ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துத் பரிமாறவும் .