Home Tamil வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்

வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்

0 comments
Published under: Tamil
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது.

துரித உணவு வகையை சார்ந்த ப்ரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. ப்ரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் ப்ரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது. வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது.

ப்ரைட் ரைஸ் முதன் முதலில் சைனாவில் Sui Dynasty காலகட்டங்களில் உதயமானவை ஆகும். ப்ரைட் ரைஸ்களுக்கு உணவு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் மெல்ல மெல்ல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க  உணவு விடுதிகளின் மெனுக்கலில் இடம் பிடிக்கத் தொடங்கின. இவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையாக செய்யப்படுகிறது. எனினும் அனைத்து வகையான ப்ரைட் ரைஸ்களின் மூலக்கூறும் சீனாவையே சார்ந்தது. சீனாவில் Yangzhou மற்றும் Hokkien ப்ரைட் ரைஸ்கள் மிகவும் பிரசித்தமானவை. இவை பெரும்பாலும் பாசுமதி அரிசிகாலாலேயே செய்யப்படுகின்றன. இந்த பாசுமதி அரிசி இந்திய துணை கண்டத்தில் தான் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில் பாசுமதி உற்பத்தியில் சுமார் 70% இந்தியாவையே சார்ந்தது.

Vegetable Fried Rice

ப்ரைட் ரைசில் சேர்க்கப்படும் கேரட்டில் விட்டமின் ஏ, முட்டைக்கோசில் வைட்டமின் சி, குடைமிளகாயில் விட்டமின் இ, மற்றும் வெங்காயத்தில் நார்சத்தும் உள்ளது. இவை செய்வதற்கும் எளிமையானவை என்பதினால் வீட்டிலேயே சுலபமாக செய்து விடலாம். இப்பொழுது வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் செய்வதற்கு கீழே தேவையான பொருள்களையும் செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Vegetable Fried Rice
4 from 2 votes

வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்

வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது.
Course: Main Course
Cuisine: South Indian
Keyword: Vegetable Fried Rice

Ingredients

  • 1 கப் பாசுமதி ரைஸ்
  • 2 கேரட்
  • 150 கிராம் பீன்ஸ்
  • 1/2 கோஸ் மீடியம் சைஸ்
  • 1 குடை மிளகாய்
  • 1 ஸ்பிரிங் ஆனியன் கையளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்
  • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
  • 8 பூண்டு பல்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 வெங்காயம்

Instructions

  • ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அரை மணி நேரம் கழித்து எடுத்து தண்ணீரை நன்கு வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்). பின்பு அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் போடவும்.
  • பாசுமதி அரிசியை 15 லிருந்து 20 நிமிடம் வேக வைக்கவும். (முக்கால் பாகம் வேகும் அளவிற்கு.) சாதம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)
  • இப்பொழுது கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
  • நன்கு பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாயை மற்றும் வெங்காயத்தை அதில் போடவும்.
  • பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.
  • தேவையான அளவிற்கு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
  • காய்கறி வெந்ததும் ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து அதனுடன் சேர்க்கவும். சாதம் உடையாமல் மெதுவாக கவனமாக கிளறவும்.
  • பிறகு ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை கிளறவும்.
  • பின்பு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிது ஸ்பிரிங் ஆனியன் ஐ மேலே தூவி அலங்கரிக்கவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான சுவையான வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் தயார். இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.
4 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter