Home Tamil சாம்பார் சாதம் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி

சாம்பார் சாதம் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி

0 comments
Published under: Tamil
சாம்பார் சாதத்திற்கு அசத்தலான சைடிஷ் என்றால் பலரும்விரும்புவது அப்பளம், உருளைக்கிழங்கு மற்றும்வெண்டைக்காய் பொரியல் தான்.

சாம்பார் சாதம் தென் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. மேலும் மக்கள் அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவுகளில் இவையும் ஒன்று. சாம்பார் சாதத்திற்கு அசத்தலான சைடிஷ் என்றால் பலரும் விரும்புவது அப்பளம், உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காய் பொரியல் தான். அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெண்டைக்காய் பொரியல். கீழே இருக்கும் செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் இதை எந்த ஒரு சிரமமுமின்றி நாம் வெகு எளிதாக செய்து விடலாம்.

Sambar Rice

இப்பொழுது கீழே சாம்பார் சாதம் வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Sambar Rice
5 from 1 vote

சாம்பார் சாதம் வெண்டைக்காய் பொரியல்

சாம்பார் சாதத்திற்கு அசத்தலான சைடிஷ் என்றால் பலரும்விரும்புவது அப்பளம், உருளைக்கிழங்கு மற்றும்வெண்டைக்காய் பொரியல் தான்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Main Course
Cuisine: South Indian, Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 1 கப் துவரம் பருப்பு
  • ½ கிலோ வெண்டைக்காய்
  • 2 முருங்கைக்காய்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 உருளைக்கிழங்கு
  • 2 பூண்டு பல்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜைக்கரண்டி கடுகு
  • 1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • ½ மேஜைக்கரண்டி சீரகம்
  • மேஜைக்கரண்டி சாம்பார் தூள்
  • சின்ன எலுமிச்சம் பழம் சைஸ் புளி
  • சிறிதளவு கட்டி பெருங்காயம்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டை தயார் செய்து, உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு, மற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
  • அடுத்து சின்ன எலுமிச்சம் பழம் சைஸ் அளவு புளியை எடுத்து அதை சுமார் 5 நிமிடம் வரை ஊற வைத்து, பின்பு அதை கரைத்து சாரை வடிகட்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி போடவும்.
  • பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பூண்டு, கட்டி பெருங்காயம் மற்றும் அரை மேஜைக்கரண்டி மஞ்சள் தூளை சேர்த்து மூடி போட்டு அதை சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
  • 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை திறந்து வெந்த பருப்பை ஒரு பருப்பு மத்தை கொண்டு நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு உளுத்தம் பருப்பு மற்றும் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
  • அடுத்து அதில் சின்ன வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு நாம் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை எடுத்து அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் சாம்பார் தூள் மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.
  • 7 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் பருப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • 6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் புளி தண்ணியை ஊற்றி நன்கு கலந்து விட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி நன்கு கலந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அடுத்து ஒரு வெங்காயம் மற்றும் வெண்டைக்காயை நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அதை நன்கு வறுக்கவும்.
  • பின்னர் அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை போட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை வதக்கவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளரி விட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சாம்பார் சாதம் வெண்டைக்காய் பொரியல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment