Home Tamil சப்பாத்தி தக்காளி தொக்கு

சப்பாத்தி தக்காளி தொக்கு

0 comment
Published under: Tamil
சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம்கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள்.

சப்பாத்தி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு டிபன் வகை. குறிப்பாக வட இந்தியாவில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். சப்பாத்தி வட இந்தியர்களின் பாரம்பரியமான உணவும் கூட. இந்தியாவில் உதயமான இவை மெல்ல மெல்ல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ், மற்றும் ஸ்ரீலங்காவிலும் பிரபலமடைந்தது. தற்போது இந்தியர்கள் குடியேறியுள்ள பல ஐரோப்பிய நாடுகளிலும் சப்பாத்தி பிரபலமடைந்து உள்ளது.

Chapati Thakkali Thokku

பொதுவாக வட இந்தியாவில் சப்பாத்தியை டால், உருளைக்கிழங்கு, மட்டர் பன்னீர், பாலக் பன்னீர், மற்றும் கடாய் மஷ்ரூம் போன்ற சைடிஷ்களை வைத்து தான் உண்பார்கள். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு.

இப்பொழுது கீழே சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chapati Thakkali Thokku
5 from 2 votes

சப்பாத்தி தக்காளி தொக்கு

சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம்கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள்.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, Main Course, Snack
Cuisine: Indian, South Indian

தேவையான பொருட்கள்

  • 2 1/2 கப் கோதுமை மாவு
  • 4 பெரிய வெங்காயம்
  • 5 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பூண்டு பல்
  • 1 இஞ்சி துண்டு
  • 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி கடுகு
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 4 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகு மற்றும் சீரகத்தை போட்டு கடுகு வெடிக்கும் வரை அதை வறுக்கவும்.
  • கடுகு வெடித்தவுடன் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு குழையும் வரை அதை வதக்கவும்.
  • தக்காளி நன்கு குழைந்த பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
  • பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து ஒரு மூடி போட்டு அதை சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை வேக விடவும்.
  • 7 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது 2 கப் அளவு கோதுமை மாவை ஒரு bowl ல் கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து கொள்ளவும்.
  • அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து மீண்டும் அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவை சுமார் 6 லிருந்து 5 நிமிடம் வரை நன்கு பிசைந்து கொள்ளவும். (மாவு நன்கு மிருதுவான பதம் வரும் வரை அதை பிசையவும்.)
  • மாவு தொட்டால் கைகளில் ஒட்டக்கூடாது அப்படி ஓட்டினால் அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம் அதனால் அதில் சிறிதளவு மாவை தூவி பிசைந்து கொள்ளவும்.
  • மாவை பிசைந்து முடித்ததும் அதன் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விடவும்.
  • 20 நிமிடத்திற்கு பிறகு எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கோதுமை மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.
  • பின்பு சப்பாத்தி கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுடுவதற்குல் நாம் சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி வைத்திருக்கும் கோதுமை மாவை எடுத்து கைகளில் வைத்து தட்டி அதை கிண்ணத்தில் இருக்கும் கோதுமை மாவில் இரு புறமும் போட்டு எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து புறங்களிலும் சமமாக தேய்க்கவும்.
  • பின்னர் எண்ணெய் சுட்டதும் அதை கல்லில் பக்குவமாக போட்டு 15 லிருந்து 20 வினாடிகள் வரை வேக விட்டப் பின் அதை திருப்பி போட்டு மீண்டும் ஒரு 15 லிருந்து 20 வினாடி வரை வேக விடவும்.
  • பிறகு அதை மீண்டும் திருப்பி போட்டு சப்பாத்தி நன்கு உப்பி வரும் வரை வேக விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறே மீதமுள்ள அனைத்து சப்பாத்திகளையும் போட்டு எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து நாம் செய்த வைத்திருக்கும் தக்காளி தொக்குடன் சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter