Home Tamil பலாப்பழ கேக்

பலாப்பழ கேக்

0 comments
Published under: Tamil

jackfruits

தேவையான பொருட்கள்

பலாச்சுளைகள் – 6 (அரைக்க) + ஒன்று (நறுக்கிச் சேர்க்க)

மைதா மாவு – ஒரு கப்

சர்க்கரை – அரை கப்

எண்ணெய் – கால் கப்

பால் – கால் கப்

வெனிலா எசன்ஸ் – சில துளிகள்

மஞ்சள் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை (விரும்பினால்)

முட்டை – 2

பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி

பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி

செய்முறை

பலாச்சுளைகளுடன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

பேக்கிங் ட்ரேயைத் தயாராக வைக்கவும்.

அவனை 180 c’ல் முற்சூடு செய்யவும்.

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து வைக்கவும்.

பாத்திரத்தில் முட்டைகளை ஊற்றி நன்றாகக் கலந்து, பால் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

அதனுடன் ஃபுட் கலர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.பிறகு அரைத்து வைத்துள்ளப் பலாச்சுளைக் கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அத்துடன் சலித்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும்.

விரும்பினால் கடைசியாக ஒரு பலாச்சுளையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.

இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி ஒரு தட்டு தட்டி அவனில் வைத்து 30 – 40 நிமிடகள் வரை பேக் செய்து எடுக்கவும். (உங்களது அவனையும், பயன்படுத்தும் ட்ரேயையும் பொருத்து நேரம் மாறுபடும்).

கேக்கின் நடுவில் டூத் பிக்கை விட்டு சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும்.

மிகவும் சாஃப்ட்டான, சுவையான பலாப்பழ கேக் தயார்.

நன்றாக ஆறியதும் ட்ரேயில் இருந்து எடுத்து துண்டுகள் போடவும்.

Leave a Comment