வெங்காய சமோசா

By Praveen Kumar
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமோசாவைவிரும்பி உண்பார்கள்

சமோசா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. மாலை நேரங்களில் சுட சுட சமோசாவை புதினா சட்னியிலோ அல்லது கெட்சப்பிலோ தொட்டு உண்ணும் சுவையே தனி தான். சமோசாக்களில் பல வகை உண்டு. அதில் வெஜிடபிள் சமோசா, சிக்கன் சமோசா, உருளைக்கிழங்கு சமோசா, காலிஃப்ளவர் சமோசா, ஃபிஷ் சமோசா, மற்றும் முட்டை சமோசா குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வெங்காய சமோசா.

பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமோசாவை விரும்பி உண்பார்கள். மாலை நேரங்களில் chat கடைகளில் மற்றும் சுட சுட சமோசாவை செய்து விற்க்கும் கடைகளில் கூட்டம் அலைமோதுவதை நம்மால் காண முடியும். ஏறத்தாழ மக்களின் உணவு பழக்கத்தில் சமோசா தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவே மாறி விட்டது என்றால் அது மிகை அல்ல.

Onion Samosa

அனைவருக்கும் பிடித்தமான இந்த வெங்காய சமோசாவை நம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து சுவைக்கலாம். இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்வதனால் நம் குழந்தைகளுக்கும் எந்த ஒரு அச்சமுமின்றி இந்த வெங்காய சமோசாவை நாம் கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே வெங்காய சமோசா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Onion Samosa
5 from 1 vote

வெங்காய சமோசா

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமோசாவைவிரும்பி உண்பார்கள்
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Snack
Cuisine: Indian, South Indian

தேவையான பொருட்கள்

  • ½ கப் கோதுமை மாவு
  • ½ கப் மைதா மாவு
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 மேஜைக்கரண்டி கேரட்
  • 4 மேஜைக்கரண்டி உருளைக்கிழங்கு
  • 4 மேஜைக்கரண்டி பீன்ஸ்
  • 1 பச்சை மிளகாய்
  • ½ மேஜைக்கரண்டி சீரக தூள்
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl ல் கோதுமை மாவு, மைதா மாவு, ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை நன்கு மிருதுவான பதத்திற்கு பிணைந்து கொள்ளவும்.
  • பின்னர் அதன் மேலே சிறிதளவு எண்ணெய்யை தடவி மூடி போட்டு அதை அப்படியே சுமார் 30 லிருந்து 35 நிமிடம் வரை ஊற விடவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை கூட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கேரட், மற்றும் பீன்ஸ்ஸை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், சீரக தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு காய்கறிகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சப்பாத்திக்கு மாவு பிரிப்பது போல் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து ஒரு தட்டில் வைக்கவும்.
  • அடுத்து அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக சப்பாத்தி கல்லில் வைத்து சப்பாத்தி செய்வதற்கு மாவு தேய்ப்பதை விட சிறிது மெல்லிசாக தேய்க்கவும்.
  • பின்னர் ஒரு கத்தியின் மூலம் அதன் ஓரங்களை வெட்டி அதை சதுர வடிவிற்கு கொண்டு வந்து பின்பு அதை பாதியாக வெட்டி செவ்வக வடிவிற்கு கொண்டு வரவும். (சமோசா sheet ஐ 2 இன்ச் அகலத்திற்கு வெட்டி கொள்ளவும்.)
  • இவ்வாறே மீதமுள்ள உருண்டைகளையும் செய்து சமோசா sheet ஐ தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதை லேசாக சுட வைக்கவும்.
  • Pan சிறிது சுட்டதும் அதில் நாம் தேய்த்து வைத்திருக்கும் சமோசா sheet ஐ அதில் சரியாக 2 லிருந்து 3 வினாடிகள் அதன் இரு புறங்களிலும் போட்டு எடுக்கவும்.
  • சமோசா sheet ஐ pan ல் போட்டு எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அதிகம் சுட்டு விட்டால் அதில் காய்கறிகளை வைத்து மூட முடியாது.
  • இவ்வாறு மீதமுள்ள சமோசா sheet களையும் கல்லில் போட்டு எடுத்த பின்பு சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு மைதா மாவை எடுத்து அதை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், வதக்கி வைத்திருக்கும் காய்கறிகள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு நாம் செய்து வைத்திருக்கும் சமோசா sheet ஐ கூம்பு வடிவிற்கு மடித்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் காய்கறி கலவையை ஒரு மேஜைக்கரண்டி அளவு வைக்கவும்.
  • பின்னர் அதன் ஓரங்களை நாம் கலந்து வைத்திருக்கும் மைதா மாவை வைத்து பக்குவமாக மடித்து விடவும்‌.
  • இவ்வாறு மீதமுள்ள சமோசா sheet களையும் காய்கறி கலவையை வைத்து அதை ஒரு தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த சமோசாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சமோசாக்களை கடாயின் அளவிற்கேற்ப பக்குவமாக எண்ணெய்யில் போட்டு அது பொன்னிறம் வரும் வரை அதை பொரிக்கவும்‌.
  • சமோசா பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட கெட்சப்புடனோ அல்லது புதினா சட்னியுடனோ பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான வெங்காய சமோசா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment