Home Tamil தால் மக்கானி

தால் மக்கானி

0 comments
Published under: Tamil
தால் மக்கானி இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில்மிகவும் பிரபலமான ஒரு சைடிஷ்.

தால் மக்கானி இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒரு சைடிஷ். பொதுவாக இதை சப்பாத்தி, புல்கா, மற்றும் நான்க்கு சைடிஷ் ஆக தொட்டு உண்கிறார்கள். இதில் நாம் கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மா பீன்ஸை சேர்ப்பதனால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் நாம் பொதுவாக சப்பாத்தி மற்றும் புல்காவுக்கு சைடிஷ் ஆக பயன்படுத்தும் வெஜிடபிள் குருமா, காலி பிளவர் குருமா, பன்னீர் பட்டர் மசாலா, இவைகளுக்கு தால் மக்கானி ஒரு நல்ல மாற்று.

Dal Makhani

தால் மக்கானி பஞ்சாபில் உள்ள அனைத்து ரெஸ்டாரன்ட்டுகள் மற்றும் சிறிய உணவகங்களிலும் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் இவை குறிப்பிட்ட ரெஸ்டாரென்ட் மெனுகளில் தான் இடம் பிடித்து இருக்கும். அதனால் இதை கீழே குறிப்பிடப்பட்டுள்ள செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி நம் வீட்டிலேயே மிகவும் சுவையான தால் மக்கானியை மிக எளிதாக செய்து சுவைக்கலாம்.

இப்பொழுது கீழே தால் மக்கானி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Dal Makhani
5 from 1 vote

தால் மக்கானி

தால் மக்கானி இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில்மிகவும் பிரபலமான ஒரு சைடிஷ்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: Indian, North Indian, Punjabi

Ingredients

  • 3/4 கப் கருப்பு உளுந்து
  • 1/4 கப் ராஜ்மா பீன்ஸ்
  • 4 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பூண்டு பல்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
  • 2 மேஜைக்கரண்டி தனியா தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • 3 மேஜைக்கரண்டி வெண்ணெய்
  • தேவையான அளவு Fresh Cream
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி

Instructions

  • முதலில் கருப்பு உளுந்து எடுத்து அதை நன்றாக கழுவி தண்ணீரில் போட்டு சுமார் 8 மணி நேரம் வரை ஊற விடவும். பின்பு ராஜ்மா பீன்ஸையும் எடுத்து நன்கு கழுவி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • பின்பு வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பிரஷர் குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ், மற்றும் சிறிதளவு உப்பை அதில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 6 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதனின் பச்சை வாசனை போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்றி நன்கு கலந்து விட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு அதை சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும். (அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை வேக விடவும்.)
  • 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு கிளறி விட்டு எண்ணெய் நன்கு பிரிந்து வரும் வரை வேக விடவும்.
  • எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் அதில் சீரக தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மா பீன்ஸை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் கரம் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு pan ல் மூடி போட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
  • 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • பின்பு அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப fresh cream ஐ சேர்த்து சப்பாத்தியுடனோ அல்லது நான்வுடனோ சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையானதால் மக்கானி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Dal Makhani Recipe in English

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter