சோமாஸ் இந்தியத் துணை கண்டத்தில் உதயமான ஒரு மொறு மொறுப்பான இனிப்பு வகை. இந்தியாவைத் தவிர இவை நேபாளம் மற்றும் வங்க தேசத்திலும் பரவலாக செய்து உண்கிறார்கள். தமிழ்நாட்டில் சோமாஸ் என்று அழைக்கப்படும் இவை பிஹாரில் Purukiya என்றும், தெலுங்கானாவில் Garijalu என்றும், கர்நாடகாவில் Kajjikaya என்றும், மகாராஷ்டிராவில் Karanji என்றும், மற்றும் குஜராத்தில் Ghughra என்றும் அழைக்கப்படுகிறது. அந்தந்த பகுதிகளின் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு இதை செய்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் போலவே வட இந்தியாவில் பெரும்பாலும் இதை தீபாவளி மற்றும் அவர்களின் holi பண்டிகையின் போது செய்து சுவைக்கிறார்கள். மேலும் அக்கம் பக்கம் வீட்டாருக்குக் கொடுத்து அன்பை பரிமாறி மகிழ்கிறார்கள். சோமாஸின் ஸ்பெஷல் என்னவென்றால் பண்டிகை காலங்களில் செய்யப்படும் மற்ற இனிப்பு வகைகளை போன்று செய்வதற்கு அதிகம் நேரம் பிடிக்காது. மேலும் இதை சுமார் 10 நாட்களுக்கும் மேல் வைத்து உண்ணலாம்.
இப்பொழுது கீழே சோமாஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.
சோமாஸ்
Ingredients
- 1 கப் மைதா மாவு
- 2 மேஜைக்கரண்டி ரவா
- 1/4 கப் பொட்டுக்கடலை
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 1/2 கப் சர்க்கரை
- 8 to 10 முந்திரி
- 2 ஏலக்காய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
Instructions
- முதலில் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி, தேங்காயைத் துருவி, மற்றும் ஏலக்காயை தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு bowl ல் ஒரு கப் அளவு மைதா மாவை கொட்டி அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய், மற்றும் மொரு மொருப்புக்காக 2 மேஜைக்கரண்டி அளவு ரவையை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- அடுத்து சிறிது சிறிதாக மேஜைக்கரண்டியின் மூலம் தண்ணீர் சேர்த்து இந்த மாவை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை பிணைந்து கெட்டியான பதத்திற்கு கொண்டு வந்ததும் அதை அப்படியே ஒரு மூடி போட்டு வைக்கவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு பொட்டுக்கடலையை போட்டு சுமார் 2 நிமிடம் வரை வறுத்து எடுக்கவும்.
- வறுத்து எடுத்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொறகொறப்பான பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதே மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் தூள் செய்து வைத்திருக்கும் ஏலக்காயை ஒன்றாக போட்டு அரைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும்.
- நெய் உருகியதும் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் முந்திரி, மற்றும் துருவி வைத்துள்ள தேங்காயைப் போட்டு சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வறுத்தெடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது வறுத்த தேங்காய் முந்திரி கலவையுடன் அரைத்து வைத்திருக்கும் சர்க்கரை மற்றும் பொட்டுக்கடலை பவுடரை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- அடுத்து பிணைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் பூரிக்கு தேய்பது போல் மெல்லிசாக தேய்த்து கொள்ளவும்.
- தேய்த்த மாவை சோமாஸ் அச்சில் எண்ணெய் தடவி வைத்து பின் அதன் நடுவே பூரணத்தை வைத்து மாவின் ஓரங்களில் தண்ணியை தடவி அச்சை மூடி ஓரங்களில் வரும் மாவை வழித்து கொள்ளவும். (சோமாஸ் அச்சு இல்லை யென்றால் கைகளிலேயே இதை செய்து கொள்ளலாம்.)
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் ஒவ்வொன்றாக இந்த சோமாஸ்ஸை எண்ணெய்யில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு பொன்னிறமானதும் எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சோமாஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Somas Recipe in English