Home Tamil சோயா சங்க் மஞ்சூரியன்

சோயா சங்க் மஞ்சூரியன்

Published: Last Updated on 1 comment
Published under: Tamil
ஃபிரைட்ரைஸ், நூடுல்ஸ், நான், புல்கா, மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது.

பொதுவாகவே மஞ்சூரியன் என்றாலே பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. மஞ்சூரியன்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன், மற்றும் வெஜிடபிள் மஞ்சூரியன் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான சோயா சங்க் மஞ்சூரியன். இவை ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், நான், புல்கா, மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது.

சோயா சங்க் மஞ்சூரியன் / Soya Chunks Manchurian

சோயா சங்க் மஞ்சூரியனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் சோயா சங்க், குடை மிளகாய், சோள மாவு, மற்றும் மைதா மாவை வைத்து எளிதாக குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். இதை நம் குழந்தைகளின் பிறந்த நாளின் போதோ அல்லது வீட்டிற்கு உறவினர்கள் விருந்துக்கு வரும் போதோ இதை செய்து நாம் அவர்களை அசத்தலாம்.

இப்பொழுது கீழே சோயா சங்க் மஞ்சூரியன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

சோயா சங்க் மஞ்சூரியன் / Soya Chunks Manchurian
5 from 1 vote

சோயா சங்க் மஞ்சூரியன்

ஃபிரைட்ரைஸ், நூடுல்ஸ், நான், புல்கா, மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 2 கப் சோயா சங்க்
  • ¼ கப் சோள மாவு
  • ¼ கப் மைதா மாவு
  • 1 to 2 பச்சை மிளகாய்
  • ½ கப் பச்சை குடை மிளகாய்
  • ½ கப் சிவப்பு குடை மிளகாய்
  • ½ கப் மஞ்சள் குடை மிளகாய்
  • ¼ கப் ஸ்ப்ரிங் ஆனியன்
  • 5 பல் பூண்டு
  • துண்டு இஞ்சி
  • ½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
  • 2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி கெட்சப்
  • 1 மேஜைக்கரண்டி வினிகர்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் 2 பூண்டு மற்றும் கால் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோயா சங்கைவேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதித்ததும் அதில் சோயா சங்கை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிண்டி விட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சோயா சங்கை கீழே இறக்கி அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடித்து பின்பு அதை பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அலசி பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இருக்கும் தண்ணீரை ஒரு கரண்டியின் மூலம் லேசாக நசுக்கி எடுத்து விடவும்.
  • பின்னர் அந்த சோயா சங்கை ஒரு bowl ல் போட்டு அதில் சோள மாவு, மைதா மாவு, ஒரு மேஜைக்கரண்டி நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் பாகம் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் pan னின் அளவிற்கேற்ப அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சோயா சங்கை போட்டு அது ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்யை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்ப்ரிங் ஆனியன், மற்றும் குடை மிளகாய்களை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கெட்சப், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • அடுத்த ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து கொதித்து கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அது சிறிது கெட்டியாகும் வரை அதை கொதிக்க விடவும்.
  • அது சிறிது கெட்டியானதும் அதில் நாம் வேக வைத்து வறுத்து வைத்திருக்கும் சோயா சங்கை போட்டு அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் வினிகரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு பின்பு அதில் சிறிதளவு நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி ஒரு கிளறு கிளறி அதை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான சோயா சங்க் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

1 comment

Avatar of Tommy Rodrigues
Tommy Rodrigues August 8, 2020 - 6:12 pm

Write in English please.

Reply

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter