Home Tamil சில்லி நூடுல்ஸ்

சில்லி நூடுல்ஸ்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
சில்லி நூடுல்ஸ் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவு வகை. இதனாலேயே இவை இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.

Indo-Chinese உணவுகளில் ஃபிரைட் ரைசூகளுக்கு அடுத்த இடத்தை நூடுல்ஸ்கல் தான் பிடித்திருக்கின்றன. குறிப்பாக இளம் தலை முறையினருக்கு மிகவும் பிடித்த இந்த உணவு வகை வெவ்வேறு இடங்களில் அவரவர் விருப்பத்திற்கேற்ப வெவ்வேறு காய்கறிகள் மற்றும் செய் முறைகளை பின்பற்றி செய்யப்படுகிறது. அதில் வெஜிடபிள் நூடுல்ஸ், சில்லி நூடுல்ஸ், முட்டை நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ், மற்றும் மட்டன் நூடுல்ஸ் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

நூடுல்ஸ்களில் ஸ்பெஷல் என்னவென்றால் இவை மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவு வகை. இதனாலேயே இவை இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். சமைக்கவே தெரியாத நபர்கள் கூட மிக எளிமையாக இதை செய்து விடலாம்.

Chilli Noodles

இப்பொழுது கீழே சில்லி நூடுல்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.

Chilli Noodles
5 from 1 vote

சில்லி நூடுல்ஸ்

சில்லி நூடுல்ஸ் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவு வகை. இதனாலேயே இவை இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.
Course: Appetizer, Main Course
Cuisine: Indo-Chinese
Keyword: chilli noodles

Ingredients

  • 200 கிராம் நூடுல்ஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கேரட்
  • 1/2 கப் கோஸ்
  • 1/2 கப் சிவப்பு குடை மிளகாய்
  • 1/2 கப் பச்சை குடை மிளகாய்
  • வெள்ளை வெங்காயம் சிறிதளவு
  • ஸ்ப்ரிங் ஆனியன் ஒரு கையளவு
  • 2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி வினிகர்
  • 1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லிசாஸ்
  • 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
  • 2 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெள்ளை வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்ட பின் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும்.
  • நூடுல்ஸ் 90 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம்.)
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், வெள்ளை வெங்காயம், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
  • சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும்.
  • அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை கலக்குமாறு பிரட்டி போடவும்.
  • நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதை ஒரு bowl ல் வைத்து கெட்சப் உடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி நூடுல்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter