பீஸ் புலாவ்

By Praveen Kumar
பீஸ் புலாவ் மிகவும் சுவையான உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

புலாவ் உலகம் முழுவதும் குறிப்பாக ஆசியா துணை கண்டத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. ஆரம்ப காலகட்டங்களில் இரண்டு அல்லது மூன்று விதமான புலாவுகள் மட்டுமே இருந்திருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் பலவிதமான புலாவுகள் வந்துவிட்டன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது சூப்பரான பீஸ் புலாவ். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பீஸ் புலாவின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Peas Pulao
Peas Pulao

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக நாம் குறைந்த நேரத்தில் மிக எளிதாக சமைக்க கூடிய மிகவும் சுவையான மற்றும் ரிச்சான உணவுகளின் பட்டியலை வைத்திருப்போம். குறிப்பாக ஏதேனும் விசேஷ நாட்களின் போது அல்லது பிறந்தநாள்களின் போது இவை நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அந்த லிஸ்டில் இந்த அட்டகாசமான பீஸ் புலாவ் நிச்சயம் இடம் பிடிக்கும். இதை எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே முதல் முதலாக சமைப்பவர்கள் கூட சரியாக செய்து விட முடியும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

பீஸ் புலாவை தயார் செய்வதற்கு நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசி, பச்சை பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போன்ற காய்கறிகள் நாம் சேர்க்கும் சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை போன்ற மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் பாலுடன் நன்கு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வெந்து மிக அற்புதமானதாக இருக்கும். இந்த பீஸ் புலாவை நிச்சயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

இவ் உணவின் வரலாறு:

புலாவ் எட்டாம் நூற்றாண்டில் Abbasid சாம்ராஜ்யத்தின் போது உதயமான ஒரு உணவாக வரலாற்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இவை முகலாயப் படை எடுப்பின் போது அவர்கள் கைப்பற்றிய தேசங்களுக்கு பரவியதாகவும் கூறுகின்றனர். காலப்போக்கில் புலாவை மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சமையல் முறைக் கேற்ப்ப சிறு சிறு மாற்றங்களோட செய்து சுவைக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாகவே சமகாலத்தில் பலவிதமான புலாவுகள் உதயமாகி இருக்கிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

பீஸ் புலாவ் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 25 லிருந்து 30 நிமிடம் எடுக்கும்.

பீஸ் புலாவை முழுமையாக சுமார் 40 நிமிடத்தில் இருந்து 45 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் ரெண்டில் இருந்து மூன்று பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

பீஸ் புலாவை கைப்படாமல் பார்த்துக் கொண்டால் அதை சுமார் ரெண்டு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து சுவைக்கலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

பீஸ் புலாவில் நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

இதில் நாம் உபயோகிக்கும் பச்சை பட்டாணியில் புரத சத்து, நார் சத்து, விட்டமின் K, மற்றும் A உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் உபயோகிக்கும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பாலில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது.

Peas Pulao
No ratings yet

பீஸ் புலாவ்

பீஸ் புலாவ் மிகவும் சுவையான உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை ஒரு சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time15 minutes
Cook Time30 minutes
Total Time45 minutes
Course: Main Course
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 200 grms பச்சை பட்டாணி
  • 2 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1/4 tsp சீரகம்
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 துண்டு பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 1 1/2 cup தேங்காய் பால்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு புதினா
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசி எடுத்து அதை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினாவை நறுக்கி, பச்சை பட்டாணியை உறித்து, மற்றும் தேங்காய் பாலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் பூண்டை சேர்த்து அதை நன்கு கொரகொரப்பான பதத்திற்க்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒன்றரை மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மீதமுள்ள ரெண்டு பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் உறித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை சுமார் ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் அரிசி உடைந்து விடாமல் பக்குவமாக கிளறி விட்டு சுமார் ரெண்டு நிமிடம் வரை வேக விடவும்.
  • ரெண்டு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலை சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் புதினா இலைகளை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு ஆவி வந்தவுடன் அதில் விசிலை போட்டு சுமார் ஒரு விசில் வரும் வரை அதை வேக விடவும்.
  • ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதை சுமார் ஐந்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும்.
  • ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து பீஸ் புலாவை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக கிளறி எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

பீஸ் புலாவ் செய்ய நாம் கட்டாயம் தேங்காய் பாலை பயன்படுத்த வேண்டுமா?

தேங்காய் பாலை நாம் பயன்படுத்தும் போது புலாவ் நன்கு ரிச்சாக இருக்கும். உங்களுக்கு தேங்காய் பாலை செய்ய நேரம் இல்லை என்றாலோ அல்லது உங்களுக்கு தேங்காய் பால் விருப்பம் இல்லை என்றாலோ நீங்கள் வெறும் தண்ணீரைக் கொண்டு புலாவை செய்யலாம்.

பீஸ் புலாவில் நாம் வேறு ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?

தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பம் என்றால் பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பீஸ் புலாவை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

பீஸ் புலாவ் சற்று இனிப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு காரம் மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

பீஸ் புலாவிற்கு ஏற்ற சைடிஷ்கள் என்னென்ன?

பன்னீர் 65, பன்னீர் பட்டர் மசாலா, மஷ்ரூம் மஞ்சூரியன், பன்னீர் டிக்கா, வெஜிடபிள் ஸ்டிர் ஃப்ரை, போன்ற சைடிஷ்கள் நன்றாக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சிக்கன் மஞ்சூரியன், சில்லி சிக்கன் போன்ற சைடிஷ்கள் அட்டகாசமாக இருக்கும்.

பீஸ் புலாவை செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை நாம் பயன்படுத்தலாமா?

உங்களுக்கு சீரக சம்பா அரிசி பிடிக்கும் என்றால் நீங்கள் தாராளமாக சீரக சம்பா அரிசியையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment