Home Tamil ரவா கேசரி

ரவா கேசரி

2 comments
Published under: Tamilதீபாவளி
ரவா கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை.

ரவா கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை ரவா கேசரி தான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை பிரபலம்.

என்ன தான் இவை செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் சில நேரங்களில் சரியான பக்குவத்தில் இவை பலருக்கும் வருவதில்லை. சிறிது பக்குவம் மாறினாலும் இவை குழைந்து விடும் அல்லது கட்டியாகி விடும். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரியை சுலபமாக செய்து விடலாம்.

Rava Kesari

இப்பொழுது கீழே ரவா கேசரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Rava Kesari
3.25 from 4 votes

ரவா கேசரி

ரவா கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Breakfast, Dessert
Cuisine: South Indian
Keyword: rava kesari

Ingredients

  • 1 கப் ரவை
  • 1 கப் சர்க்கரை
  • 1/4 கப் முந்திரி
  • 1/4 கப் உலர் திராட்சை
  • சன் பிளவர் ஆயில் தேவையான அளவு
  • 2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர்
  • 1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
  • துருவிய பிஸ்தா தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து உருக்கிக் கொள்ளவும்.
  • நெய் உருகியதும் அதில் முந்திரியைப் போட்டு முந்திரி சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.
  • பின்பு அதில் உலர் திராட்சையை சேர்த்து திராட்சை நன்கு ஊதும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து நெய் உருகிய பின் அதில் ரவையை போட்டு சுமார் 6 இலிருந்து 7 நிமிடம் வரை வறுக்கவும். (ரவை கலர் மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)
  • ரவை வறுபட்டதும் அதை எடுத்து வேறு ஒரு தட்டில் போட்டு பரப்பி ஆற விடவும்.
  • இப்பொழுது அதே pan ல் 3 கப் தண்ணீர் சேர்த்து அதில் 5 மேஜைக்கரண்டி சன் பிளவர் ஆயில், 3 மேஜைக்கரண்டி நெய், மற்றும் 2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். (கேசரி திகட்டாமல் இருப்பதற்காகவே நெய் பாதி அளவு மற்றும் எண்ணெய் பாதி அளவு சேர்த்துக் கொள்கிறோம்.)
  • தண்ணீர் கொதித்ததும் வறுத்து எடுத்து வைத்துள்ள ரவையை அதில் போட்டு கட்டி தட்டாமல் கிளறி ஒரு மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு கப் அளவு சர்க்கரை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறி விடவும். பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறிய பின் மீண்டும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.
  • அடுத்து அதில் கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் போட்டு கிளறி வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை அதில் சேர்த்து கிளறவும்.
  • பின்பு இதை ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்தில்லோ எடுத்து வைத்து அதன் மேலே சிறு துருவிய பிஸ்தா துண்டுகலை தூவி பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரி தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

 

Rava Kesari in English.

2 comments

Avatar of Abi Selvan
Abi Selvan November 9, 2020 - 2:31 pm

Kesari ethna nal kedamal irukum

Reply
Avatar of Praveen Kumar
Praveen Kumar November 9, 2020 - 5:21 pm

3 முதல் 4 நாட்கள் வரை, fridge ல வெச்ச

Reply

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter