Home Tamil செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு

செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு

0 comments
Published under: Tamil
இறால் தொக்கை பெரும்பாலும் சாதத்தில் போட்டோ, சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது தோசைக்கு சைட் டிஷ் ஆகவோ தான் சுவைக்கபடுகிறது.

இறால் தொக்கு தமிழகத்தில் அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. இதற்கென இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு என்றால் கேட்கவே தேவையில்லை அதனின் வாசமே வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கூட்டி வந்து விடும். நன்கு காரசாரமான மசாலாவில் ஊறி இருக்கும் இறாலை சுவைப்பதெ ஒரு தனி ருசி தான். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா?

Eral Thokku

இறால் தொக்கை பெரும்பாலும் சாதத்தில் போட்டோ, சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது தோசைக்கு சைட் டிஷ் ஆகவோ தான் சுவைக்கபடுகிறது. மிளகு ரசம் சாதமும் மற்றும் இறால் தொக்கும் ஒரு அசத்தலான காம்பினேஷன். இதற்கு நிகர் இது தான். மற்ற அசைவ உணவுகளைப் போல இதை சமைப்பதற்கு அதிக நேரம் ஆகாது. இறால் எளிதில் வேகும் தன்மை கொண்டு இருப்பது தான் இதற்கு காரணம். ஆனால் இறாலை சுத்தம் செய்வதற்கு மற்ற மாமிசங்களை விட சிறுது கூடுதலான நேரம் எடுக்கும்.

இப்பொழுது கீழே செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Eral Thokku
5 from 1 vote

செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு

இறால் தொக்கை பெரும்பாலும் சாதத்தில் போட்டோ, சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது தோசைக்கு சைட் டிஷ் ஆகவோ தான் சுவைக்கபடுகிறது.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: Chettinad, South Indian

தேவையான பொருட்கள்

  • 1/2 kg வெள்ளை இறால்
  • 1 1/2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 காஞ்ச மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 1 பிரியாணி இலை
  • 1/2 மேஜைக்கரண்டி தனியா தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 துண்டு பட்டை
  • 1 நட்சத்திர பூ
  • 3 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 1 மேஜைக்கரண்டி மல்லி
  • 1 மேஜைக்கரண்டி மிளகு
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி சோம்பு
  • 1/4 மேஜைக்கரண்டி கடுகு
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை,கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, நட்சத்திர பூ, ஏலக்காய், மல்லி, மிளகு, சோம்பு, காஞ்ச மிளகாய், மற்றும் சீரகத்தை சேர்த்து அதை நன்கு வறுக்கவும்.
  • அது நன்கு வறுபட்டதும் அதை அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்னர் ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றி அதை நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் மிக்ஸி ஜாரை சுத்தம் செய்து விட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு நன்கு பேஸ்ட்டாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் பிரியாணி இலை, நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் கழுவி வைத்திருக்கும் இறாலை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை சேர்த்து அதை நான்கு ஒன்றோடு ஒன்று ஓட்டுமாறு கலந்து விடவும்.
  • பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடி, மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.
  • 10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி சுமார் ஒரு நிமிடம் வரை அடுப்பில் வைத்து பின்பு எடுத்து சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment