தவா சிக்கன் மசாலா

By Praveen Kumar
பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த தவா சிக்கன் மசாலாமிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும்

இந்தியாவில் பிரபலமாக இருக்கும் அசைவ உணவுகளில் தவா சிக்கன் மசாலா முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் சார்ந்த உணவுகளை விரும்பி உண்ணும் உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி இவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. தவா சிக்கன் மசாலாவை வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு இதை மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.

Tawa Chicken Masala (தவா சிக்கன் மசாலா)

தவா சிக்கன் மசாலாவை நாம் மற்ற குழம்பு சாதத்திற்கு அல்லது ரசம் சாதத்திற்கு சைடிஷ் ஆகவோ, அல்லது சாதத்தில் போட்டு பிரட்டியோ, அல்லது சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாக்கு சைடிஷ் ஆகவும் நாம் உண்ணலாம். ஆனால் சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாக்கு சைடிஷ் ஆக சாப்பிடுவதை விட இவை ரசம் சாதத்திற்கு ஒரு அசத்தலான காம்பினேஷன் ஆக இருக்கும். ஒரு முறை இந்த காம்பினேஷனை சுவைத்தால் போதும் இதனின் சுவை நாக்கிலேயே தங்கி விடும்.

தவா சிக்கன் மசாலாவை விரும்பி உண்பவர்கள் இதை பெரும்பாலும் துரித உணவகங்களிலோ அல்லது ரெஸ்டாரன்ட்களிலோ ஆர்டர் செய்து தான் இதை உண்கிறார்கள். ஆனால் இதை நாம் வெகு எளிதாக வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து விடலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த தவா சிக்கன் மசாலா மிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அதனால் இதை நாம் சுகாதாரமான முறையில் வீட்டிலேயே செய்வதனால் நம் குழந்தைகளுக்கும் இதை எந்த ஒரு அச்சமுமின்றி நாம் கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே தவா சிக்கன் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Tawa Chicken Masala (தவா சிக்கன் மசாலா)
5 from 1 vote

தவா சிக்கன் மசாலா

பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த தவா சிக்கன் மசாலாமிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும்
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ சிக்கன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 2 துண்டு இஞ்சி
  • 1 பச்சை மிளகாய்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 எலுமிச்சம் பழம்
  • ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 மேஜைக்கரண்டி மல்லி விதை
  • மேஜைக்கரண்டி சோம்பு
  • 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
  • மேஜைக்கரண்டி சீரகம்
  • 3 கிராம்பு
  • 1 நட்சத்திர பூ
  • 1 ஏலக்காய்
  • 4 துண்டு பட்டை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மல்லி விதை, சோம்பு, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், கிராம்பு, நட்சத்திர பூ, ஏலக்காய், 2 துண்டு பட்டை, மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை நன்கு பொன் நிறம் வரும் வரை வறுக்கவும்.
  • அது பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும்.
  • சிறிது நேரத்திற்கு பிறகு அது ஆறியதை உறுதி செய்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு தவாவை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 8 லிருந்து 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் கால் மேஜைக்கரண்டி அளவு சீரகம் மற்றும் 2 துண்டு பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வேக விடவும். (சிக்கனை ஒரு கரண்டியின் மூலம் கிண்டி கொண்டே இருக்கவும்.)
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து சிக்கன் நன்கு வேகும் வரை அதை வேக விடவும். (2 கரண்டியின் மூலம் சிக்கனை நன்கு கிளறி விட்டு கொண்டே இருக்கவும்.)
  • சிக்கன் நன்கு வெந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் தவா சிக்கன் மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment