சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

By Praveen Kumar
ரெஸ்டாரன்ட்மற்றும் fast food களில் கிடைக்கும்அதே சுவையிலேயே சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில் நாம்வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

ஃப்ரைட் ரைஸ்கள் உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஒரு உணவு. ஃப்ரைட் ரைஸ்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் ஃப்ரைட் ரைஸ், ப்ரான் ஃப்ரைட் ரைஸ், எக் ஃப்ரைட் ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மற்றும் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்.

Chicken Szechuan Fried Rice / சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

பெரும்பாலும் ஃப்ரைட் ரைஸ்களை விரும்பி உண்பவர்கள் இதை ரெஸ்டாரண்ட்க்கு அல்லது fast food க்கு சென்று தான் சுவைக்கிறார்கள். ஆனால் இங்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் ரெஸ்டாரன்ட் மற்றும் fast food களில் கிடைக்கும் அதே சுவையிலேயே சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில் நாம் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

இப்பொழுது கீழே சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Szechuan Fried Rice / சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்
5 from 1 vote

சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்

ரெஸ்டாரன்ட்மற்றும் fast food களில் கிடைக்கும்அதே சுவையிலேயே சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில் நாம்வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Main Course
Cuisine: Chinese, Indo-Chinese
Keyword: Fried Rice, Szechuan

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 200 கிராம் போன்லெஸ் சிக்கன்
  • 4 முட்டை
  • ½ கப் குடை மிளகாய்
  • 22 காய்ந்த மிளகாய்
  • 4 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  • 3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
  • 2 மேஜைக்கரண்டி வினிகர்
  • தேவையான அளவு கருப்பு மிளகு தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு சர்க்கரை
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்து பின்னர் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காய்ந்த மிளகாயை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • பின்பு குடை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பின்னர் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடிகட்டி அரிசியை கழுவி வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).
  • பின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நாம் ஊற வைத்து வடிகட்டி வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக வைக்கவும். (சாதம் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.)
  • 20 நிமிடத்திற்கு பிறகு சாதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விடவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)
  • அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் காய்ந்த மிளகாயை எடுத்து தண்ணீரை நன்கு வடித்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி பூண்டு மற்றும் 2 மேஜைக்கரண்டி இஞ்சியை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தண்டை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய் பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் வினிகர், சர்க்கரை, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வேக விடவும்.
  • 8 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு செஷ்வான் சாஸை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதை நன்கு பொடிமாசாக ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு மேஜைக்கரண்டி பூண்டு, 2 மேஜைக்கரண்டி இஞ்சி, மற்றும் 2 காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனின் ஆடி பாகத்தை போட்டு அதனுடன் குடை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அது நன்கு மசாலாவொடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் செஷ்வான் சாஸை அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  • அடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை பக்குவமாக சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக நன்கு கிளறி விடவும்.
  • பின்னர் அதில் நாம் வதக்கி வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து அதை பக்குவமாக கிளறி விட்டு அதில் சிறிதளவு நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment