சென்னா மசாலா இந்தியாவில் உதயமான ஒரு பிரபலமான உணவு வகை. சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டு கொள்ள பல சைடிஷ்கள் இருந்தாலும் சென்னா மசாலாவின் இடத்தை நிரப்ப முடியாது. உணவு பிரியர்கள் மத்தியில் இந்த காம்பினேஷன்க்கு தனி வரவேற்பு உண்டு. இதில் உடம்பிற்கு மிகவும் தேவையான புரதச்சத்து கொண்ட கொண்டை கடலை சேர்ப்பதனால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது.
இப்பொழுது கீழே சென்னா மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.
சென்னா மசாலா
Ingredients
- 1/4 கப் கொண்டை கடலை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 கப் துருவிய தேங்காய்
- 8 to 10 முந்திரி
- 1 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 2 பல் பூண்டு
- 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
- மிளகாய் தூள் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி ஒரு கை அளவு
- கருவேப்பிலை ஒரு கை அளவு
Instructions
- கொண்டை கடலையை சுமார் 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (கொண்டை கடலையை செய்வதற்கு முந்தைய நாள் இரவே ஊற வைத்து விடவும்.)
- முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கி, இஞ்சி மற்றும் பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது துருவி வைத்திருக்கும் தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் முந்திரி மற்றும் பச்சை மிளகாய் போட்டு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து அதே ஜாரில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் 50 கிராம் அளவு கொண்டை கடலையை அந்த ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 4 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் கருவேப்பிலை மற்றும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- அடுத்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை சேர்த்து கிளறி ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும். (கிரேவி திக்காக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
- 5 நிமிடத்திற்கு பிறகு கிரேவி நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் அரைத்து வைத்திருக்கும் கொண்டை கடலையை போட்டு நன்கு கலக்கி விடவும்.
- அடுத்து ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டை கடலையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
- சென்னா மசாலாவை இறக்குவதற்கு முன் ஒரு கையளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சென்னா மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
Sign up for our newsletter
Add Awesome Cuisine as a Preferred Source
Chana Masala Recipe in English