உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி

By Praveen Kumar
சப்பாத்தி மற்றும் பூரிக்கு சைடிஷ் ஆக உண்டால் மிகவும்அட்டகாசமாக இருக்கும்

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு சைடிஷ் ஆக மக்கள் சுவைக்கிறார்கள். இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள், காய்கறிகள், மற்றும் செய்முறையை பின் பற்றி மக்கள் வித விதமாக சமைத்து சுவைக்கிறார்கள். கிரேவிகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் கிரேவி, மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் என்று இங்கு காண இருப்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி.

உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி நாம் வழக்கமாக செய்து உண்ணும் கிரேவிகலுக்கு ஒரு அருமையான மாற்று. இவை மற்ற உணவுகளுக்கு சைடிஷ் ஆக உண்பதை விட சப்பாத்தி மற்றும் பூரிக்கு சைடிஷ் ஆக உண்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை வீட்டில் இருப்பவர்கள் இந்த காம்பினேஷனை சுவைத்து விட்டால் கட்டாயம் அவர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்து தர சொல்லி கேட்பது நிச்சயம். மேலும் நம் குழந்தைகளும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.

உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி / Potato Capsicum Gravy
உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி / Potato Capsicum Gravy

உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெறும் உருளைக்கிழங்கு, குடை மிளகாய், மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். அது மட்டுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து சுவைக்க கூடிய அட்டகாசமான சைடிஷ் இவை.

இப்பொழுது கீழே உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி / Potato Capsicum Gravy
5 from 1 vote

உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி

சப்பாத்தி மற்றும் பூரிக்கு சைடிஷ் ஆக உண்டால் மிகவும்அட்டகாசமாக இருக்கும்
Prep Time15 minutes
Cook Time20 minutes
Total Time35 minutes
Course: Side Dish
Cuisine: Tamil, Tamil Nadu
Keyword: capsicum, Potato Capsicum Gravy, potato kurma

தேவையான பொருட்கள்

  • 2 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 குடை மிளகாய்
  • 3 பூண்டு பல்
  • 1 இஞ்சி துண்டு
  • ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 1 மேஜைக்கரண்டி தனியா தூள்
  • ½ மேஜைக்கரண்டி சீரகம்
  • 2 பட்டை துண்டு
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 ஏலக்காய்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மற்றும் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு அதை நன்கு கலந்து விட்டு இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • தக்காளியின் பச்சை வாசம் போனதும் அதில் கால் மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், தனியா தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் குடை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பிறகு ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து அதில் சேர்த்து ஒரு மூடி போட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 6 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவியை சப்பாத்தியுடன் சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் உருளைக்கிழங்கு குடை மிளகாய் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment