
சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். தென்னிந்தியாவில் பிரபலமாக இருக்கும் இந்த குருமா வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி மக்கள் வித விதமாக சமைத்து உண்கின்றன.
குருமாக்களில் பல வகை உண்டு. அதில் பிரசித்தி வாய்ந்தது மட்டன் குருமா, சிக்கன் குருமா, வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு குருமா, மற்றும் காலிஃபிளவர் பட்டாணி குருமா ஆகும். அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் குருமா எவ்வாறோ, சைவப் பிரியர்களுக்கு வெஜிடபிள் மற்றும் காலிபிளவர் பட்டாணி குருமா. இவை செய்வதற்கு தேவையான பொருட்கள் சற்று அதிகமாக இருந்தாலும் இவை செய்வதற்கு சுலபம் தான். இப்பொழுது கீழே சுவையான வெஜிடபிள் பட்டாணி குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.

காலிஃபிளவர் பட்டாணி குருமா Recipe
Ingredients for காலிஃபிளவர் பட்டாணி குருமா
- 1 medium காலிஃபிளவர்
- 1/2 கப் fresh பச்சை பட்டாணி
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 2 பச்சை மிளகாய்
- 2 பிரியாணி இலை
- 1 துண்டு பட்டை
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1/4 மேசைக்கரண்டி கடுகு
- சோம்பு தேவையான அளவு
- இஞ்சி தேவையான அளவு
- 2 பூண்டு பல்
- 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்த் தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- மிளகாய்த்தூள் தேவையான அளவு
- 1 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை
- 1/2 மேஜைக்கரண்டி சீரகம்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 6 to 7 முந்திரி
How to make காலிஃபிளவர் பட்டாணி குருமா
- முதலில் காலிஃப்ளவர், தக்காளி, மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை துண்டு, கிராம்பு, கடுகு, மற்றும் 1 மேஜைக்கரண்டி சோம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், அவரவர் தேவைக்கேற்ப மிளகாய்த்தூள், கரம் மசாலா, மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுத்து இதனுடன் காலிஃபிளவர், பச்சை பட்டாணி, மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒரு மூடி போட்டு காய்கறிகள் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.
- காய்கறிகள் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, அரை மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், மற்றும் 6 லிருந்து 7 முந்திரியை ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றி நன்கு கிளறவும். பின்னர் 3 லிருந்து 5 நிமிடம் வரை pan ல் மூடி போட்டு வேக விடவும்.
- குருமாவை இறக்குவதற்கு முன் தேவையான அளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மணமான காலிஃபிளவர் பட்டாணி குருமா தயார். இதை வீட்டில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.
image via Youtube