Home Tamil வெஜிடபிள் கட்லெட்

வெஜிடபிள் கட்லெட்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து கட்லெட்களாக செய்து கொடுக்கலாம்.

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை.

காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. ஏனென்றால் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு தான் காய்கறி கலவை பிரிந்து வராமல் அப்படியே வைத்திருக்கும்.

Vegetable Cutlet

இப்பொழுது கீழே வெஜிடபிள் கட்லெட் செய்வதற்கு தேவையான பொருட்களையும் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Vegetable Cutlet
4.50 from 2 votes

வெஜிடபிள் கட்லெட்

காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து கட்லெட்களாக செய்து கொடுக்கலாம்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian
Keyword: appetizer, cutlet, evening snack, kids

Ingredients

  • 3 உருளைக்கிழங்கு
  • 2 கேரட்
  • 4 to 5 பீன்ஸ்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1 மீடியம் சைஸ் ஆனியன்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் மைதா மாவு
  • 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • Bread Crumbs தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்த்தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • மிளகாய்த்தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • மிளகுத்தூள் தேவையான அளவு
  • 8 to 10 முந்திரி

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின்பு கேரட், பீன்ஸ், வெங்காயம், மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு ஒன்றிலிருந்து இரண்டு நிமிடம் வரை வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா மற்றும் அவரவர் தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  • இந்த கலவை சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அதில் கால் கப் தண்ணீரை ஊற்றி காய்களை 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 அல்லது 3 நிமிடத்திற்கு பிறகு காய்கள் சிறிது வெந்ததும் அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
  • பின்பு அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். (இந்த கலவை நன்றாக மாவு மாதிரி இருக்க வேண்டும்.
  • இந்த கலவை தண்ணியாக இருந்தால் அதில் சிறிது bread crumbs ஐ சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.)
  • இந்த கலவை சிறிது ஆறியவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லி, மிளகுத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • இப்பொழுது கட்லெட் pieces தயார் செய்வதற்கு தேவையான bread crumbs, மற்றும் அரை கப் மைதா மாவில் தண்ணீர் விட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது செய்து வைத்திருக்கும் கட்லெட் மாவை உங்களுக்குப் பிடித்தமான வட்ட வடிவிலோ அல்லது ஹார்டின் வடிவிலோ தட்டி அதை மைதா மாவில் முக்கி பின்னர் bread crumbs ல் நன்கு இருபுறமும் புரட்டி போட்டு ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி என்னை சுட்டதும் இந்த கட்லெட் pieces pan ன் அளவுக்கேற்ப போடவும்.
  • ஒரு புறம் பொன்னிறமானதும் மற்றொரு புறம் திருப்பி விடவும்.
  • இரு புறமும் பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அதன் மேலே சிறு பொரித்த முந்திரி துண்டுகளை வைக்கவும்.
  • இதை கெட்சப் அல்லது சட்னியோடு சேர்த்து பரிமாறலாம்.
  • இப்பொழுது உங்கள் சூடான சுவையான கட்லெட் தயார்.
  • இதை வீட்டில் செய்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter