நவராத்திரி விழாவின் போது தயாரிக்கப்படும் ஆரோக்கியமான புரதம் நிரம்பிய சுண்டல் செய்முறை.
வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் ஒரு ஆரோக்கியமான மற்றும் சத்தான மாலை சிற்றுண்டி.
இந்த சண்டல் தயாரிக்க மிகவும் எளிதானது. இதற்கு குறைந்தபட்ச பொருட்கள் தேவை மற்றும் வீட்டிலேயே ஒரு நொடியில் தயாரிக்கலாம்.
வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் / Vella Kondakadalai Sundal / White Chickpeas Sundal
வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் ரெசிபி
நவராத்திரி விழாவின் போது தயாரிக்கப்படும் ஆரோக்கியமான புரதம் நிரம்பிய சுண்டல் செய்முறை.
வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் கொண்டைக் கடலை ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவைகேற்ப உப்பு
- 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
பொடி செய்ய:
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 2 பட்டை
- 2 லவங்கம்
- 1 டீஸ்பூன் அம்சூர் பவுடர்
தாளிக்க:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- சிறிதளவு கரிவேபில்லை
- 2 காய்ந்த மிளகாய்
வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் செய்முறை
- பொடி செய்ய குடுத்த அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- பின் அதில் அம்சூர் பவுடர் கலந்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.
- பிறகு, அதில் வேகவைத்த வெள்ளை கொண்ட கடலை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.
- பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.