Home Tamil வாழைப்பழ பணியாரம் கார சட்னி

வாழைப்பழ பணியாரம் கார சட்னி

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
பணியாரம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்மிகவும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை

பணியாரம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்பு வகை. தமிழில் பணியாரம் என்று அழைக்கப்படும் இவை, கன்னட மொழியில் Gunta Ponganalu என்றும், மற்றும் தெலுங்கு மொழியில் Tulu என்றும் அழைக்கப்படுகிறது. பணியாரத்தில் பலவகை உண்டு. அதில் குழி பணியாரம், மசாலா குழி பணியாரம், ரவா பணியாரம், மற்றும் வாழைப்பழ பணியாரம் மிகவும் பிரபலமானது. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது வாழைப்பழ பணியாரம்.

பொதுவாகவே பணியாரம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை. அதிலும் வாழைப்பழ பணியாரம் என்றால் கேட்கவே தேவையில்லை அதற்கு இருக்கும் மவுசே தனி தான். இதில் நாம் வாழைப்பழத்தை சேர்த்து செய்வதால் மற்ற பணியாரங்களை விட இவை உடம்புக்கும் நல்லது. மேலும் வாழைப்பழத்தை விரும்பாத குழந்தைகள் கூட வாழைப்பழத்தை பயன்படுத்தி இப்படி பணியாரமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.

Banana Paniyaram

வாழைப்பழ பணியாரம் நாம் வழக்கமாக பண்டிகை காலங்களில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு ஒரு நல்ல மாற்று. அது மட்டுமின்றி நாம் நம் நண்பர்களுக்கு விருந்து அளிக்கும் போதோ அல்லது விருந்தினர்கள் வீட்டிற்கு வரும் போது நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் இனிப்பு வகைகளுக்கு பதிலாக வாழைப்பழ பணியாரத்தை நாம் செய்து அவர்களை அசத்தலாம். மேலும் இதை ஒரு அருமையான காலை நேர டிபன் ஆகவும் நாம் செய்து உண்ணலாம்.

இப்பொழுது கீழே வாழைப்பழ பணியாரம் மற்றும் கார சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Banana Paniyaram
4.50 from 2 votes

வாழைப்பழ பணியாரம் கார சட்னி

பணியாரம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்மிகவும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Snack
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 5 வாழைப்பழம்
  • 150 கிராம் மைதா மாவு
  • 150 கிராம் கோதுமை மாவு
  • 150 கிராம் சர்க்கரை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 3 துண்டு தேங்காய்
  • 1 பச்சை மிளகாய்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 பூண்டு பல்
  • ½ மேஜைக்கரண்டி கடுகு
  • ½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
  • ½ மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • சிறிதளவு கருவேப்பிலை
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய், பூண்டு, மற்றும் வாழைப்பழத்தை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு வதக்கவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, 2 காய்ந்த மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை அதை வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு அது சிறிது நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது நிறம் மாறிய உடன் அதில் ஒரு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு ஒரு கிளறு கிளறி அதை எடுத்து நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை ஒரு மிக்ஸி ஜாரில் கொட்டி அதை நன்கு அரைத்து விடவும்.
  • பின்பு வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி அதில் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து கொள்ளவும்.)
  • அடுத்து அதில் மைதா மாவு, கோதுமை மாவு, மற்றும் நெய்யை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைக்கவும். (தண்ணீர் அதிகமாக சேர்த்து விடக்கூடாது அரைக்கும் போது அவ்வப்போது பார்த்து அளவோடு சேர்த்து கொள்ளவும்.)
  • பிறகு பேக்கிங் பவுடரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கரைத்து அதில் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றிய பின் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சுமார் 30 லிருந்து 40 நிமிடம் வரை ஊற விடவும்.
  • மாவு ஊறுவதற்குல் பணியார சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இருக்கும் குழிகளில் எண்ணெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும். (நெய்யை விரும்புவர்கள் எண்ணெய்க்கு பதிலாக அதில் நெய்யை சேர்த்து கொள்ளலாம்.)
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் ஊற வைத்திருக்கும் மாவை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து அதை ஒவ்வொரு குழியிலும் பக்குவமாக ஊற்றி ஒரு மூடியைப் போட்டு மூடி பணியாரம் வெந்து மேலே வரும் வரை அதை வேக விடவும்.
  • பணியாரம் வெந்து மேலே வந்ததும் அதை திருப்பி போட்டு சிறிது நேரம் வேக விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட நாம் செய்து வைத்திருக்கும் கார சட்னியுடன் அதை பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மிகவும் மிருதுவான வாழைப்பழ பணியாரம் மற்றும் கார சட்னி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter