Home Tamil வெஜ் மோமோஸ்

வெஜ் மோமோஸ்

0 comments
Published under: Tamil
மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.

மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இதை மதிய உணவு உண்பதற்கு முன் starters ஆகவும் பரிமாறுகிறார்கள். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட் மற்றும் chat shop களில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். மோமோஸ்ஸில் பல வகை இருக்கிறது. அதில் சிக்கன் மோமோஸ், பீஃப் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ், சீஸ் மோமோஸ், மற்றும் பால் உருண்டை மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படும் khoa மோமோஸ் பிரபலமானவை.

Veg Momos

மோமோஸ் திபெத் அல்லது இந்தியாவில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் உதயமாகி இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் மோமோஸ் என்கிற இதனின் பெயர் சீன மொழியிலிருந்து தான் வந்திருக்கிறது. அதற்கேற்றவாரே மோமோஸ் சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு இவை உலகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் உணவு முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு இதை செய்து சுவைக்கின்றனர்.

மோமோஸை தொட்டு உண்பதற்காகவே பிரத்தியேகமாக ஒரு சட்னி செய்யப்படுகிறது. இந்த சட்னி தக்காளி, காஞ்ச காஷ்மீரி மிளகாய், பூண்டு, மிளகு தூள், சர்க்கரை, வினிகர், மற்றும் உப்பு கொண்டு செய்யப்படுகிறது. மோமோஸை இந்த சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அது ஒரு அசத்தலான காம்பினேஷன் என்பதை மறுக்க முடியாது. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா?

இப்பொழுது கீழே வெஜ் மோமோஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Veg Momos
5 from 2 votes

வெஜ் மோமோஸ்

மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.
Prep Time15 minutes
Cook Time14 minutes
Total Time29 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Chinese, Indian

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 2 கேரட்
  • 5 to 6 பீன்ஸ்
  • 1/2 முட்டைகோஸ் (சின்னது)
  • 2 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
  • 1 மேஜைக்கரண்டி வினிகர்
  • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl ல் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40 லிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும்.
  • பின்பு அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
  • பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.
  • அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும்.
  • ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை அதில் வைக்கவும்.
  • அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைத்து மூடி போட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜ் மோமோஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment