Home Tamil கடலை மிட்டாய்

கடலை மிட்டாய்

0 comment
Published under: Tamil
கடலை மிட்டாய் ஒரு அற்புதமான மற்றும் சத்தான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். இதை வெகு எளிதில் எந்தவித சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம்.

சாயங்காலம் வந்துவிட்டாலே நம்மில் பல பேருக்கு நன்கு மொறு மொறுப்பாக மற்றும் சுவையான சிற்றுண்டியை சுவைக்க வேண்டும் என்று தானாக தோன்றிவிடும். பொதுவாக மொறு மொறுப்பாக இருக்கும் பல உணவுகள் உடலுக்கு சரியானவையாக இருக்காது ஆனால் மொறுமொறுப்பாக இருக்கும் உணவு சத்தானதாகவும் இருந்தால் அது ஜாக்பாட் தானே? அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது அட்டகாசமான மொறு மொறுப்பான மற்றும் சத்தான கடலை மிட்டாய். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான கடலை மிட்டாய்யின்  வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Kadalai Mittai

Kadalai Mittai / கடலை மிட்டாய்

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

வெகு எளிதில் நாம் செய்யக்கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸ்களில் கடலை மிட்டாயும் ஒன்று. இதை எந்த ஒரு முன் சமையல் அனுபவம் இல்லாதவர்கள் கூட முதல் முறையிலே சரியாக செய்து விடலாம். இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்காக பலவிதமான டயட்டுகளை நாம் பின்பற்றி வருகிறோம். அவ்வாறு டயட்டுகளில் இருப்பவர்களுக்கு இவை ஒரு அருமையான வரப் பிரசாதம். இவை சத்தானவை மட்டுமின்றி இதை உண்டால் நன்கு நிறைவாக சீக்கிரம் பசி ஏற்படுத்தாமல் இருக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நாம் கடலை மிட்டாய் செய்ய பயன்படுத்தும் வறுத்த வேர்க்கடலை நாம் வெல்லம் கொண்டு செய்யும் கேரமல்லில் நன்கு இறுகி மொறு மொறுப்பாகவும் மற்றும் மிகுந்த சுவையாக இருக்கும். இதை கட்டாயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

சில குறிப்புகள்:

வறுத்த வேர்கடலையை நீங்கள் கடையில் வாங்கி இருந்தாலும், கடலை மிட்டாய் செய்வதற்கு முன்பாக அதை மீண்டும் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

அடுப்பை ஏற்றி வைத்தே வேர்கடலையை வறுக்கலாம். அப்படி செய்தால் சீக்கிரமாகவே வேர்கடலையை வறுத்து விடலாம். ஆனால் ஏத்தி வைத்து வறுத்தால் மிக கவனமாக கரண்டியின் மூலம் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் கடலை எளிதில் கருகிவிடும். கடலை கருகி விட்டால் கடலை மிட்டாய் துவர்ப்பு தன்மையை கொடுக்கும்.

கேரமல் சரியான பதத்தில் இருப்பதை உறுதி செய்ய ஒரு கிண்ணத்தில் தண்ணி எடுத்து அதில் இரண்டு சொட்டு கேரமல்லை விட்டால் அது ஜவ்வு கட்டியாக மாறி தண்ணிக்கு அடியே சென்றால் அது சரியான பதத்தில் இருப்பதாக அர்த்தம். அது தண்ணீரில் கரைந்து விட்டால் அது இன்னும் சற்று நேரம் கொதிக்க வேண்டும் என்று பொருள்.

வேர்க்கடலையை கேரமல்லில் போட்ட உடனே நாம் நெய்யை தேய்த்து வைத்திருக்கும் தட்டிற்க்கு அதை மாற்றி விடுங்கள். சற்று தாமதித்தாலும் அந்த கலவை இறுகி போய்விடும்.

இவ் உணவின் வரலாறு:

கடலை மிட்டாய் முதல் முதலாக 1888 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் இந்தியா ஆதிக்கத்தின் போது  Maganlal என்பவரால் மும்பை அருகில் இருக்கும் Lonavala என்கின்ற மழைப்பகுதியில் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் வேர்க்கடலை, வெல்லம், மற்றும் நெய்யை கொண்டு மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த கடலை மிட்டாய் காலப்போக்கில் முந்திரி, பாதாம், பிஸ்தா, எள், போன்ற பலவிதமான பொருட்களை கொண்டு மக்கள் செய்து சுவைக்க தொடங்கி இருக்கிறார்கள். முதலில் மும்பையில் செய்யப்பட்டிருந்தாலும் இவை இன்று இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு ஸ்னாக்ஸ் ஆக மாறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் கடலை மிட்டாய் என அழைக்கப்படும் இவை கேரளாவில் Kappalandi muthai என்றும், கர்நாடகாவில் Kadale Mittai என்றும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் Palli Patti என்றும், பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் Iayiya Patti என்றும் அழைக்கப்படுகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

கடலை மிட்டாய் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை செய்வதற்க்கு சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

கடலை மிட்டாய்யை முழுமையாக சுமார் 35 நிமிடத்தில் இருந்து 40 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

கடலை மிட்டாய்யை செய்தவுடன் ஒரு ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைத்து விட்டால் சுமார் ரெண்டு மாதம் வரை இதை வைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

  • எள்ளு கடலை மிட்டாய்
  • கருப்பு எள்ளு கடலை மிட்டாய்
  • நாட்டு சர்க்கரை கடலை மிட்டாய்
  • முந்திரி கடலை மிட்டாய்
  • வேர்க்கடலை தேங்காய் கடலை மிட்டாய்
  • சாக்லேட் வேர்க்கடலை கடலை மிட்டாய்

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

கடலை மிட்டாய் செய்வதற்கு நாம் பயன்படுத்தும் வேர்க்கடலையில் புரத சத்து, இரும்பு சத்து, கொழுப்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் விட்டமின் B6 உள்ளது. இவை இதய ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்புக்கான டயட்டில் மிகவும் உதவியாக இருக்கும்.

நாம் இதில் பயன்படுத்தும் வெல்லத்தில் புரத சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், விட்டமின் B 12 மற்றும் B 6 உள்ளது. இவை ஜீரண சக்தியை அதிகரிக்க மற்றும் குடலில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் ஏலக்காய் தூளில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, ஜீரண சக்தியை கூட்ட, மற்றும் அல்சரை குணப்படுத்த உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் நெய்யில் கொழுப்பு சத்து, விட்டமின் A, E, மற்றும் K உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஜீரண சக்தியை அதிகரிக்க, மற்றும் எலும்பை வலுப்படுத்த உதவுகிறது.

 

Kadalai Mittai
No ratings yet

கடலை மிட்டாய்

கடலை மிட்டாய் ஒரு அற்புதமான மற்றும் சத்தான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். இதை வெகு எளிதில் எந்தவித சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம்.
Prep Time10 minutes
Cook Time25 minutes
Total Time35 minutes
Course: Snack
Cuisine: Tamil, Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 2 cups வேர்க்கடலை
  • 2 cups வெல்லம்
  • 1/2 cup தண்ணீர்
  • 1 tsp ஏலக்காய் தூள்
  • தேவையான அளவு நெய்

செய்முறை

  • முதலில் வேர்கடலையின் தோலை உரித்து அதை பாதி பாதியாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் பாதி பாதியாக உடைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை போட்டு அது நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வறுக்கவும்.
  • வேர்க்கடலை பொன்னிறமானதும் அடுப்பை அணைத்துவிட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு அதை சற்று நேரம் ஆற விடவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 1/2 cup அளவு தண்ணீர் ஊற்றவும்.
  • பின்பு அதில் வெல்லத்தைப் போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கரைத்து விடவும்.
  • வெல்லம் நன்கு கரைந்த உடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே சற்று நேரம் வைக்கவும்.
  • இப்பொழுது சதுரங்க வடிவில் ஒரு தட்டையோ அல்லது டிரேயையோ எடுத்து அதில் நன்கு நெய்யை தடவி வைக்கவும்.
  • அடுத்து கேரமல் செய்ய ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் வெல்லப்பாகை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி ஊற்றி கேரமல் சரியான பதம் வரும் வரை அதை ஒரு கரண்டியின் மூலம் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  • கேரமல் சரியான பதம் வந்ததும் அதில் 4 tsp அளவு நெய் மற்றும் ஏலக்காய் தூளை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் நாம் வறுத்து ஆற வைத்திருக்கும் வேர்க்கடலைகளை போட்டு அடுப்பை அணைத்துவிட்டு அதை நன்கு கிளறி விடவும்.
  • கிளறி விட்ட உடனே நாம் நெய்யை தடவி வைத்திருக்கும் தட்டில் இந்த கலவையை கொட்டி நன்கு சமமாக பரப்பி அதை நன்கு ஆற விடவும்.
  • அது ஆறிய உடன் தட்டை அப்படியே கவுத்தி அதை எடுத்து ஒரு கத்தியின் மூலம் சதுரங்க வடிவில் நறுக்கவும்.
  • அவ்வளவுதான் உங்கள் சுவையான மற்றும் சத்தான கடலை மிட்டாய் ரெடி. இதை உங்கள் வீட்டில் இருக்கும் குட்டிஸோடு சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்: 

கடலை மிட்டாய் செய்ய நாம் பயன்படுத்தும் வெல்லத்துக்கு பதிலாக ரிஃபைண்ட் சுகர் அல்லது சோள சிரப் பயன்படுத்துலாமா?

பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வெல்லமே உடலுக்கு ஆரோக்கியமானது. அதனால் வெல்லத்தைப் பயன்படுத்துவதே உகந்தது.

கடலை மிட்டாய்யை நாம் சர்க்கரையை பயன்படுத்தி செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். சர்க்கரை பாகை நன்கு கொதிக்க வைத்து அது சற்று கட்டியான பக்குவத்தை அடைந்த பின் அதை நாம் வறுத்து வைத்திருக்கும் வேர்க்கடலையில் சேர்த்து கலந்து விடவும்.

கடலை மிட்டாயில் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்களை நாம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாமா?

உங்களுக்கு விருப்பம் என்றால் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். இவை உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானவையும் கூட.

இந்த கடலை மிட்டாயில் ட்ரை கோக்கனட்டை நாம் பயன்படுத்தலாமா?

உங்களுக்கு விருப்பம் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். நெய் தடவிய ட்ரேயில் கலவையை கொட்டி சமன் செய்த பின் அதன் மேலே ட்ரை கோக்கனட்டை தூவி விடவும்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter