Home Tamil வெஜிடபிள் பான்கேக்

வெஜிடபிள் பான்கேக்

0 comments
Published under: Tamil
நமது காலையை நாம் சத்தான உணவோடு தொடங்கினால் அது நம்மை நாள் முழுக்க முழு ஆற்றலோடு வைத்திருக்க உதவும்.

காலை உணவு நம் அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான அங்கம். நமது காலையை நாம் சத்தான உணவோடு தொடங்கினால் அது நம்மை நாள் முழுக்க முழு ஆற்றலோடு வைத்திருக்க உதவும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான வெஜிடபிள் பான்கேக். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான பான்கேக்கின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்

Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

நாம் வழக்கமாக காலையில் வேலைக்கு கிளம்பும்போதோ அல்லது பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பும்போதோ அவசர அவசரமாக அவர்களுக்கு ஒரு இட்லியோ அல்லது தோசையோ வழக்கமாக செய்து கொடுப்போம். எப்பொழுதுமே தோசை மற்றும் இட்லி தானா? இதற்கு ஒரு விடுவே இல்லையா என்று அவர்கள் பலமுறை கேட்டிருக்கக்கூடும். விடிவு வந்து விட்டது. இந்த வெஜிடபிள் பான்கேக் நாம் வழக்கமாக உண்ணும் இட்லி தோசைக்கு ஒரு அருமையான மாற்று உணவு.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்: 

வெங்காயம், கேரட், மற்றும் முட்டைகோஸ் நன்கு கோதுமை மற்றும் கடலை பருப்பு கலவையில் ஒன்றோடு ஒன்று கலந்து மிகுந்த சுவையாக இருக்கும். இவை உள்ளே மெதுவாகவும் மற்றும் வெளியே சற்று மொறுமொறுப்பாகவும் இருக்கும். இதன் காரணமாக இதனின் சுவை நாள் முழுக்க நம் நாவில் இருந்து நீங்காமல் இருக்கும். பொதுவாக பான்கேக்குகளை முட்டை சேர்த்து தான் செய்வார்கள். ஆனால் இதில் நாம் முட்டை சேர்க்காததால் சைவ பிரியர்களும் இதை உண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி நீங்கள் சமையலில் எக்ஸ்பர்ட் ஆக இல்லாமல் இருந்தாலும் இந்த வெஜிடபிள் பான்கேக்கை வெகு சுலபமாக முதல் முறையிலேயே சரியாக செய்து விட முடியும்.

சில குறிப்புகள்: 

காய்கறி கோதுமை மாவு கலவையை கலக்கும்போது தண்ணீர் அதிகமாகி விடாமல் இருப்பதற்கு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து கிளறவும்.

உங்களுக்கு காரம் பிடிக்காது என்றால் பச்சை மிளகாய் போடுவதை தவிர்த்து விடலாம்.

இவ் உணவின் வரலாறு:

பான்கேக்குகள் ஆதி காலத்தில் இருந்தே மனிதர்களால் உண்ணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்க இலக்கியங்களில் பான்கேக்குகள் முதல் முதலாக குறிப்பிட பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வளவு வரலாற்றுப் பழமை யான இந்த பான்கேக்குகள் இன்று ஏறத்தாழ உலகம் முழுவதும் பலதரப்பு மக்களால் அந்தந்த பகுதிக்கான உணவு முறைக்கு ஏற்ப செய்யப்பட்டு சுவைக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட பான்கேக் வகைகள் இருக்கிறது என்றால் உலகம் முழுவதும் எத்தனை வகை இருக்கும் என்று யோசிங்களேன்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

வெஜிடபிள் பான்கேக் செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 20 லிருந்து 25 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 20 லிருந்து 25 நிமிடம் எடுக்கும்.

வெஜிடபிள் பான்கேக்கை முழுமையாக சுமார் 45 நிமிடத்தில் இருந்து 50 நிமிடத்திற்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

வெஜிடபிள் பான்கேக்கை ஒரு நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் உண்ணலாம். எனினும் அன்றே உண்டு விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்: 

  • பைனாப்பிள் பேன்கேக்
  • உருளைக்கிழங்கு பேன்கேக்
  • இட்லி
  • ஆப்பம்
  • தோசை

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்: 

வெஜிடபிள் பான்கேக் செய்ய நாம் பயன்படுத்தும் கோதுமை மாவில் புரத சத்து, நார் சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

நாம் சேர்க்கும் முட்டைக்கோஸில் நார் சத்து, கால்சியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதயத்திற்கு நல்லது மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

நாம் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, மற்றும் விட்டமின் B இருக்கிறது.

நாம் இதில் சேர்க்கும் கேரட்டில் நார் சத்து, பொட்டாசியம், விட்டமின் K1, B6, மற்றும் A உள்ளது. இவை கண்களுக்கு மிகவும் நல்லது

Vegetable Pancake / வெஜிடபிள் பான்கேக்
5 from 1 vote

வெஜிடபிள் பான்கேக்

நமது காலையை நாம் சத்தான உணவோடு தொடங்கினால் அது நம்மை நாள் முழுக்க முழு ஆற்றலோடு வைத்திருக்க உதவும்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast
Cuisine: American, Korean

தேவையான பொருட்கள்

  • 1/2 cup கோதுமை மாவு
  • 1/2 cup பொட்டுக்கடலை
  • 1 bowl முட்டைகோஸ்
  • 2 கேரட்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • 1 tsp மிளகு தூள்
  • 1 tsp சீரகத்தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp உப்பு
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பொட்டுக்கடலையை நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • அடுத்து ஒரு pan ஜ அடுப்பில் வைத்து அதில் 3 tsp எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், முட்டைகோஸ், மற்றும் பூண்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் மூன்று நிமிடம் வரை வேக விடவும்.
  • மூன்று நிமிடத்திற்குப் பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், மற்றும் சீரகத்தூள்ளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சுமார் 1/4 cup தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு மிதமான சூட்டில் சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
  • ஐந்து நிமிடம் கழித்து அந்தக் காய்கறி கலவையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சற்று நேரம் ஆற விடவும்.
  • காய்கறி கலவை ஆறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி, கோதுமை மாவு, மற்றும் அரைத்து வைத்திருக்கும் கடலைமாவை போட்டு நன்கு கிளறவும்.
  • பின்பு அதில் கவனமாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து மாவை தட்டும் பதத்திற்கு கொண்டு வரவும்.
  • இப்பொழுது ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 tps எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையை ஒரு கரண்டி மூலம் கொஞ்சம் எடுத்து வைத்து மெதுவாகத் தட்டி அதை தட்டை வடிவத்திற்கு கொண்டு வரவும்.
  • பின்பு அதை சுமார் மூன்றி லிருந்து நான்கு நிமிடம் நன்கு பொன் நிறமாக மாறும் வரை வேக விடவும்.
  • அது பொன்னிறமானதும் அதை திருப்பிப் போட்டு அந்தப் பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.
  • அவ்வளவுதான் உங்கள் அற்புதமான வெஜிடபிள் பேன் கேக் ரெடி. இதை சுட சுட உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:  

வெஜிடபிள் பான்கேக்கை எந்த சைடிஷும் இல்லாமல் உண்ணலாமா?

ஆம் இதை நாம் எந்த ஒரு சைடிஷும் இல்லாமல் தாராளமாக உண்ணலாம். தேவைப்பட்டால் நாம் வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் சட்னி அல்லது வெங்காய சட்னியை இதற்கு சைடிஷ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெஜிடபிள் பான்கேக்கில் வேறு ஏதேனும் காய்கறிகளை நாம் சேர்க்கலாமா?

தாராளமாக உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்த பீன்ஸ், பச்சை பட்டாணி, மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை சேர்க்கலாம்.

இந்த வெஜிடபிள் பான்கேக் செய்யும் கலவையை நான் முந்தைய இரவே செய்து வைத்துக் கொள்ளலாமா?

இல்லை. நாம் பான்கேக் செய்வதற்கு முன்பாக தயாரிப்பது தான் உகந்தது.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter