Home Tamil பாம்பே மசாலா வெஜ் சாண்ட்விச்

பாம்பே மசாலா வெஜ் சாண்ட்விச்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
நம்குழந்தைகளுக்கு மதிய உணவாக பள்ளிகளுக்கு கொடுத்து அனுப்பவோ அல்லது நாம்அலுவலகங்களுக்கு எடுத்து செல்லவோ இவை மிகவும் உகந்தது.

சாண்ட்விச் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு சாண்ட்விச் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இன்றைய இயந்திரமயமான உலகில் சாண்ட்விச் பல பேர்களின் உணவு பழக்கத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றால் அது மிகை அல்ல. சாண்ட்விச்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் சாண்ட்விச், வெஜிடபிள் சாண்ட்விச், மஸ்ரூம் சாண்ட்விச், மற்றும் பன்னீர் சாண்ட்விச் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் அசத்தலான பாம்பே மசாலா வெஜ் சாண்ட்விச்.

Bombay Masala Veg Sandwich

பொதுவாகவே சாண்ட்விச்களில் குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய ஒரு அருமையான உணவு. குறுகிய நேரத்தில் வெகு எளிதாக செய்யப்பட்டாலும் instant processed food களை போல் இல்லாமல் இவை உடம்புக்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய ஒரு உணவு. அது மட்டுமின்றி இவை ஒரு உகந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட. நம் குழந்தைகளுக்கு மதிய உணவாக பள்ளிகளுக்கு கொடுத்து அனுப்பவோ அல்லது நாம் அலுவலகங்களுக்கு எடுத்து செல்லவோ இவை மிகவும் உகந்தது.

இப்பொழுது கீழே பாம்பே மசாலா வெஜ் சாண்ட்விச் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Bombay Masala Veg Sandwich
5 from 2 votes

பாம்பே மசாலா வெஜ் சாண்ட்விச்

நம்குழந்தைகளுக்கு மதிய உணவாக பள்ளிகளுக்கு கொடுத்து அனுப்பவோ அல்லது நாம்அலுவலகங்களுக்கு எடுத்து செல்லவோ இவை மிகவும் உகந்தது.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast, Snack
Cuisine: Indian, Maharashtrian

தேவையான பொருட்கள்

  • 4 பிரெட் ஸ்லைஸ்
  • 4 உருளைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 குடை மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 எலுமிச்சம் பழம்
  • 2 பூண்டு பல்
  • 2 இஞ்சி துண்டு
  • ½ மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி பாவ் பாஜி மசாலா
  • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு சாட் மசாலா
  • தேவையான அளவு சீஸ்
  • தேவையான அளவு வெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு ஓமப்பொடி
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு புதினா

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அரை வெங்காயம், கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு சுமார் 4 விசில் வரும் வரை அதை வேக விடவும்.
  • 4 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு உருளைக்கிழங்கை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் அதை ஆற விட்டு பின்பு அதன் தோலை உரித்து அதை நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் சீரகம் மற்றும் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியை போட்டு இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சியின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு வெங்காயம் மற்றும் ஒரு பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் பாவ் பாஜி மசாலா, கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கவும்.
  • பின்னர் இரு பிரெட்டை எடுத்து அதில் வெண்ணெய்யை தடவி பின்பு நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னியை அதன் மேலே தடவவும்.
  • பிறகு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைத்து அதன் மேலே நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், வெங்காயம், தக்காளி, அவரவர் விருப்பத்திற்கேற்ப சீஸை துருவி போட்டு, மற்றும் சாட் மசாலாவை தூவி மற்றொரு பிரட்டை அதன் மேலே வைக்கவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய்யை போட்டு அதை உருக விடவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதை நன்கு pan ல் தேய்த்து விட்டு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாண்ட்விச்சை வைத்து அது வெந்து கொண்டிருக்கும் போதே மேலே உள்ள பிரட்டில் சிறிதளவு பட்டரை தடவி ஒரு புறம் வெந்ததும் சாண்ட்விச்சை மறு புறம் பக்குவமாக திருப்பி வைக்கவும்.
  • பின்பு சிறிது நேரத்திற்குப்பிறகு அதை எடுத்து அப்படியே சுட சுட ஒரு தட்டில் வைத்து அதை கவனமாக நான்கு துண்டுகளாக வெட்டி அதன் மேலே ஓம்ப்பொடியை தூவி அதை கெட்ச்சப்புடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் கிறிஸ்பியான பாம்பே மசாலா வெஜ் சாண்ட்விச் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter