மீன் கோலா உருண்டை

By Praveen Kumar
மொறு மொறுப்பாகமற்றும் சுவையாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி

Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. கோலா உருண்டைகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, மீன் கோலா உருண்டை, மற்றும் வெஜிடபிள் கோலா உருண்டை மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மீன் கோலா உருண்டை.

மீன் கோலா உருண்டைகள் நன்கு மொறு மொறுப்பாக மற்றும் சுவையாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. அது மட்டுமின்றி இவை உடம்புக்கு சத்தானதும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான உருண்டைகளை செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி உண்பார்கள்.

மீன் கோலா உருண்டை / Meen Kola Urundai

இப்பொழுது கீழே மீன் கோலா உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

மீன் கோலா உருண்டை / Meen Kola Urundai
5 from 1 vote

மீன் கோலா உருண்டை

மொறு மொறுப்பாகமற்றும் சுவையாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian, Tamil

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் வஞ்சிரம் மீன்
  • 4 பிரட்
  • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
  • 1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  • ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை மிளகு தூள்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster யின் மூலமாகவோ toast செய்து அரைத்து கொள்ளலாம்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் மீனை போட்டு அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக நம் கைகளின் மூலம் பிரித்து போட்டு அதில் இருக்கும் முள்ளை எடுத்து விடவும். (அனைத்து முள்களையும் மிகவும் கவனமாக எடுத்து விடவும்.)
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் பிரித்து வைத்திருக்கும் மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் அதில் மிளகு தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
  • பிறகு அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.
  • அது வெந்ததும் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் சோள மாவை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
  • நாம் வதக்கி வைத்திருக்கும் மீன் கலவை ஆறியதும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நாம் கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை bread crumbs ல் போட்டு நன்கு உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இவ்வாறு மீதமுள்ள மீன் கலவையை உருட்டி தயாராக தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை பக்குவமாக போட்டு பொரிக்கவும்.
  • பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment