Home Tamil முட்டைகோஸ் மஞ்சூரியன்

முட்டைகோஸ் மஞ்சூரியன்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
முட்டைகோஸ்மஞ்சூரியனை ஃபிரைட் ரைஸ்கள் மற்றும் நூடுல்ஸ்களுக்கு சைடிஷ் ஆக சுவைக்கலாம். அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சுவைக்கலாம்.

மஞ்சூரியன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு indo Chinese உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். மஞ்சூரியன்களில் பல வகை உண்டு. அதில் சிக்கன் மஞ்சூரியன், ஃபிஷ் மஞ்சுரியன், பன்னீர் மஞ்சூரியன், வெஜிடபிள் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், மற்றும் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தையும் நாம் பல முறை செய்து சுவைத்து இருப்போம். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான முட்டைகோஸ் மஞ்சூரியன்.

Cabbage Manchurian

Image via YouTube

முட்டைகோஸ் மஞ்சூரியனையும் நாம் வழக்கமாக மஞ்சூரியன் செய்யும் முறையில் தான் செய்யப்படுகிறது. அதனால் இதையும் நாம் மற்ற மஞ்சூரியன்களை போல ஃபிரைட் ரைஸ்கள் மற்றும் நூடுல்ஸ்களுக்கு சைடிஷ் ஆக சுவைக்கலாம். அல்லது முட்டைகோஸ் மஞ்சூரியனை வெறுமனேயும் ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டியாக நாம் சுவைக்கலாம். நம் குழந்தைகளும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.

முட்டைகோஸ் மஞ்சூரியனின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் முட்டைகோஸ்சை வைத்தே நாம் இந்த அசத்தலான மஞ்சூரியனை செய்து விடலாம். மேலும் இந்த முட்டைகோஸ் மஞ்சூரியனை நம் பிறந்தநாட்களின் போதோ அல்லது வீட்டிற்கு உறவினர்கள் விருந்துக்கு வரும் போதோ செய்து நாம் அவர்களை அசத்தலாம்.

இப்பொழுது கீழே முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Cabbage Manchurian
5 from 2 votes

முட்டைகோஸ் மஞ்சூரியன்

முட்டைகோஸ்மஞ்சூரியனை ஃபிரைட் ரைஸ்கள் மற்றும் நூடுல்ஸ்களுக்கு சைடிஷ் ஆக சுவைக்கலாம். அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சுவைக்கலாம்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish, Snack
Cuisine: Indo-Chinese, South Indian

தேவையான பொருட்கள்

  • 2 கப் துருவிய முட்டைகோஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 5 பூண்டு பல்
  • இஞ்சி துண்டு
  • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 2 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • 1 மேஜைக்கரண்டி டார்க் சோயா சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி டொமேட்டோ கெட்சப்
  • 1 மேஜைக்கரண்டி வினிகர்
  • ½ மேஜைக்கரண்டி மிளகு தூள்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

செய்முறை

  • முதலில் வெங்காயம், குடை மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன்னை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் முட்டைகோஸை நன்கு பொடியாக துருவி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து நாம் பொடியாக துருவி வைத்திருக்கும் முட்டைகோஸை எடுத்து அதை ஒரு bowl ல் போட்டு அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து அதை கலந்து விடவும்.
  • பின்பு அதில் சோள மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (முட்டைகோஸ் தண்ணீர் விடும் என்பதால் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.)
  • இந்த கலவையை நன்கு கலந்த பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை பிரிட்ஜில் வைக்கவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை ஒவ்வொன்றாக போடவும்.
  • பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.
  • முட்டைகோஸ் உருண்டை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் சோயா சாஸ், வினிகர், டொமேட்டோ கெட்சப், மற்றும் ரெட் சில்லி சாஸ்ஸை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் சுமார் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் நன்கு கலந்து விட்டு அதை சுமார் 2 மணி நேரம் வரை கொதிக்க விடவும்.
  • மஞ்சூரியன் சிறிது கிரேவியாக வேண்டும் என்றால் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து கொள்ளவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் முட்டைகோஸ் உருண்டைகளை அதில் போட்டு அதை பக்குவமாக அது நன்கு மசாலாவோடு சேருமாறு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்னை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான முட்டைகோஸ் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter