Home Tamil ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்

ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்

Published: Last Updated on 0 comment
Published under: Tamilசூப்
வழக்கமாக நாம் செய்யும் சிக்கன் சூப்க்கு மாற்றாக ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்பை நம் குடும்பத்தாருக்கு செய்து கொடுத்தால் அதை அவர்களும்விரும்பி சுவைப்பார்கள்.

உலகம் முழுவதும் சிக்கன் சூப்களுக்கு இருக்கும் வரவேற்பே தனிதான் என்றால் அது மிகையல்ல. அது போன்று இதற்கு நிகரான ஒரு அருமையான starters வெகு குறைவுதான். சிக்கன் சூப்பை உலகம் முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் என்கிற ஒரு விதமான சிக்கன் சூப் வகை.

Sweet Corn Chicken Soup

பொதுவாக சிக்கன் சூப்களை வெங்காயம், கேரட், மற்றும் செலரியை கொண்டு செய்வார்கள். ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்பில் அதன் பெயருக்கு ஏற்றவாறு சோள விதைகளையும் சேர்த்து செய்கிறார்கள். அதனால் ஏறத்தாழ இரண்டுமே ஒரே செய்முறையை பின்பற்றி தான் செய்யப்படுகிறது. ஆனால் என்ன சிக்கன் சூப்பை விட ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்பில் இனிப்பு தன்மை சிறிது கூடுதலாகவே இருக்கும். வழக்கமாக நாம் செய்யும் சிக்கன் சூப்க்கு மாற்றாக ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்பை நம் குடும்பத்தாருக்கு செய்து கொடுத்தால் அதை அவர்களும் விரும்பி சுவைப்பார்கள்.

இப்பொழுது கீழே ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Sweet Corn Chicken Soup
5 from 1 vote

ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்

வழக்கமாக நாம் செய்யும் சிக்கன் சூப்க்கு மாற்றாக ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்பை நம் குடும்பத்தாருக்கு செய்து கொடுத்தால் அதை அவர்களும்விரும்பி சுவைப்பார்கள்.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Soup
Cuisine: Indo-Chinese

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் சிக்கன்
  • 1 1/2 கப் சோள விதைகள்
  • 1 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 கேரட்
  • 2 செலரி
  • 3 பூண்டு பல்
  • 1 மேஜைக்கரண்டி மிளகு
  • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 2 சூப் sticks
  • தேவையான அளவு மிளகு தூள்
  • தேவையான அளவு வெங்காய தாள்
  • தேவையான அளவு வெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் வெங்காயம், கேரட், செலரி, வெங்காய தாளை நறுக்கி வைத்து, பூண்டு மற்றும் மிளகை இடித்து, மற்றும் சிக்கனை நன்கு கழுவி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கனை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட், மற்றும் செலரியை போட்டு அதை நன்கு கலக்கி விடவும்.
  • பின்பு அதில் நாம் இடித்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் மிளகை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தில் மூடி போட்டு அதை சுமார் 50 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை வேக விடவும்.
  • ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் இருக்கும் சிக்கன் துண்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • பிறகு அந்த சிக்கன் ஸ்டாக்கை ஒரு வடிகட்டியின் மூலம் நன்கு வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் கப் அளவு சோள விதைகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் சேர்த்து அதை உருக விடவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் வெங்காய தாளின் அடி பாகங்களை போட்டு அதை வதக்கவும்.
  • பின்பு அதில் முக்கால் கப் அளவு முழு சோள விதைகள் மற்றும் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் சோள விதைகளை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்னர் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக்கி இதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து இதில் நாம் வடிகட்டி வைத்திருக்கும் சிக்கன் ஸ்டாக்கை தேவையான அளவு சேர்த்து அதை கொதிக்க விடவும்.
  • சூப் சிறிது கெட்டியாக இருக்க வேண்டும் என்றால் 2 மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து கொள்ளவும்.
  • பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 நிமிடம் வரை வேக விடவும்.
  • 8 நிமிடத்திற்கு பிறகு ஒரு முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி அதை நன்கு அடித்து இதில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மேஜைக்கரண்டியின் மூலம் சேர்த்து கொள்ளவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காய தாளை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு கப்பில் ஊற்றி அதில் சூப் sticks ஐ வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

 

Sweet Corn Chicken Soup Recipe in English

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter