Home Tamil முட்டை பெப்பர் ஃப்ரை

முட்டை பெப்பர் ஃப்ரை

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
முட்டைபெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றியோ, அல்லதுமற்ற சாதத்திர்க்கு சைடிஷ் ஆகவோ நாம் உண்ணலாம்.

முட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு. பொதுவாக முட்டைகளை வித விதமான முறையில் சமைத்து உண்டு இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான முட்டை பெப்பர் ஃப்ரை. இந்த முட்டை பெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றியோ, அல்லது மற்ற சாதத்திர்க்கு சைடிஷ் ஆகவோ நாம் உண்ணலாம். இவை வெறுமனே மாலை நேர சிற்றுண்டியாக செய்து உண்பதற்கும் மிகவும் உகந்தது.

Egg Pepper Fry

இந்த முட்டை பெப்பர் ஃப்ரை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். இதை நாம் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்தை தரும் முட்டை மற்றும் மிளகை கொண்டு செய்வதால் இவை உடம்புக்கு மிகவும் நல்லது. அதனால் நம் குழந்தைகளுக்கு அவர்கள் பள்ளி முடித்து வீடு திரும்பும் போது இதை ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு இதை ஒரு மதிய உணவாகவோ நாம் செய்து கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே முட்டை பெப்பர் ஃப்ரை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Egg Pepper Fry
5 from 1 vote

முட்டை பெப்பர் ஃப்ரை

முட்டைபெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றியோ, அல்லதுமற்ற சாதத்திர்க்கு சைடிஷ் ஆகவோ நாம் உண்ணலாம்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 3 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • மேஜைக்கரண்டி மிளகு
  • 1 மேஜைக்கரண்டி மல்லி விதைகள்
  • ½ மேஜைக்கரண்டி சோம்பு
  • ½ மேஜைக்கரண்டி சீரகம்
  • 2 பட்டை துண்டு
  • 4 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 1 காஞ்ச மிளகாய்
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கருவேப்பிலை
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முட்டைகளை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முட்டைகளை போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.
  • 12 நிமிடத்திற்கு பிறகு முட்டைகளை வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதன் கூடை உரித்து அதை 2 துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மிளகு, சோம்பு, சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய், காஞ்ச மிளகாய், மற்றும் மல்லி விதைகளை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி சிறிது நேரம் ஆற விடவும்.
  • அது நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பிறகு அதில் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு அதை நன்கு அந்த மசாலாக்கலோடு ஒட்டுமாறு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டைகளை போட்டு அது நன்கு மசாலாக்கலோடு ஒட்டுமாறு அதை கிளறி விட்டு பின்பு அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு முட்டை பெப்பர் ஃப்ரையை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான முட்டை பெப்பர் ஃப்ரை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter