ரஷ்யன் சாலட்

Tamil 0 comments

ரஷ்யன் சாலட் ரஷ்ய நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ஒரு பாரம்பரியமான உணவு. ரஷ்ய நாட்டில் உதயமான இவை மெல்ல மெல்ல ஈரான், இஸ்ரேல், மங்கோலியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பிரபலம் அடைந்து இருக்கிறது. இதை வெவ்வேறு இடங்களில் அங்கிருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு இந்த ரஷ்யன் சாலட்டை மக்கள் செய்து சுவைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் இவை உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை கொண்டு தான் செய்யப்படுகிறது.

russian salad - ரஷ்யன் சாலட்

நாம் வழக்கமாக பல சாலட்களை செய்து உண்டு இருப்போம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் சாலட்களுக்கு இந்த ரஷ்யன் சாலட் ஒரு அருமையான மாற்று. இதை மாலை நேரங்களில் நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அதை அவர்கள் விரும்பி உண்பார்கள். மேலும் வீட்டிற்கு விருந்தினர்கள் விருந்துக்கு வரும் போது இந்த வித்தியாசமான ரஷ்யன் சாலட்டை செய்து அவர்களை அசத்தலாம்.

இப்பொழுது கீழே ரஷ்யன் சாலட் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

russian salad 380x380 - ரஷ்யன் சாலட்
0 from 0 votes

ரஷ்யன் சாலட் ரெசிபி

நாம் வழக்கமாக செய்து உண்ணும் சாலட்களுக்கு இந்த ரஷ்யன்சாலட் ஒரு அருமையான மாற்று.
Prep Time15 mins
Cook Time15 mins
Total Time30 mins
Course: Salad
Cuisine: Indian, Russian

ரஷ்யன் சாலட் செய்ய தேவையான பொருட்கள்

 • 3 உருளைக்கிழங்கு
 • 2 கேரட்
 • ¾ அன்னாச்சி பழம்
 • ½ கப் பீன்ஸ்
 • ½ கப் பச்சை பட்டாணி
 • ½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
 • 1 கப் மயோனிஸ்
 • 1 துண்டு பிரக்கோலி
 • 1 பனிப்பாறை கீரை இதழ்
 • தேவையான அளவு உப்பு

ரஷ்யன் சாலட் செய்முறை

 • முதலில் உருளைக்கிழங்கு, கேரட், மற்றும் அன்னாச்சி பழத்தை சதுர வடிவில் நறுக்கி, பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட்டை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
 • தண்ணீர் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட்டை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
 • 2 நிமிடத்திற்கு பிறகு அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • பின்பு அதே பாத்திரத்தில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ்ஸை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
 • 2 நிமிடத்திற்கு பிறகு பீன்ஸ்ஸை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • பின்பு அதே பாத்திரத்தில் நாம் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
 • 3 நிமிடத்திற்கு பிறகு பச்சை பட்டாணியை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • பின்பு அதே பாத்திரத்தில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
 • 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு உருளைக்கிழங்கை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் அன்னாச்சி பழத்தையும் போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
 • பின்னர் அந்த கலவையில் சிறிதளவு உப்பு, கருப்பு மிளகு தூள், மற்றும் ஒரு கப் அளவு மயோனிஸ்ஸை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
 • பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு பனிப்பாறை கீரை இதனை வைத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் கலவையை வைத்து அதன் மேலே ஒரு பிரக்கோலியை வைத்து அதை ஜில்லென்று பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் சில்லென்று இருக்கும் ரஷ்யன் சாலட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*