சென்னா தம் பிரியாணி

By Praveen Kumar
பொதுவாக பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு.

பொதுவாக பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. பிரியாணியில் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன் பிரியாணி மிகவும் பிரபலமானவை. ஆனால் ஒரு சேஞ்சுக்கு நாம் இங்கு காண இருப்பது  சென்னா தம் பிரியாணி. இதனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை மாமிசம் சேர்த்து செய்யாததால் சைவ பிரியர்களும் இந்த பிரியாணியை சுவைக்கலாம்.

Channa Dum Biryani
Image via Youtube

இப்பொழுது கீழே சென்னா தம் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Channa Dum Biryani
5 from 2 votes

சென்னா தம் பிரியாணி

பொதுவாக பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Course: Main Course
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் பாசுமதி அரிசி
  • 200 கிராம் கொண்டக்கடலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 12 to 15 பேபி உருளைக்கிழங்கு
  • 3 பூண்டு பல்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 கப் தயிர்
  • 2 பிரியாணி இலை
  • 2 நட்சத்திர பூ
  • 6 கிராம்பு
  • 2 துண்டு பட்டை
  • 4 ஏலக்காய்
  • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜைக்கரண்டி சீரகத் தூள்
  • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • ஒரு கை அளவு புதினா
  • ஒரு கை அளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசி மற்றும் கொண்டக்கடலையை நன்கு கழுவி பாசுமதி அரிசியை அரை மணி நேரமும், கொண்டைக்கடலையை சுமார் 10 மணி நேரமும் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் கொண்டைக்கடலையை மீண்டும் நன்கு கழுவி அதில் சேர்த்து மூடி போட்டு அதை சுமார் 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் அரை மேஜைக்கரண்டி அளவு மிளகாய் தூள் மற்றும் கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் நாம் வேக வைத்து தோல் உரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் போட்டு சுமார் 5 நிமிடம் வரை வதக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரிசியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பிரியாணி இலை, ஒரு நட்சத்திர பூ, 3 கிராம்பு, ஒரு துண்டு பட்டை, மற்றும் 2 ஏலக்காய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி வடிகட்டி அதில் போட்டு அதனுடன் கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அது முக்கால் பாகம் வேகும் வரை வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் மற்றும் எண்ணெய்யை சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • நெய் சுட்டதும் அதில் ஒரு பிரியாணி இலை, ஒரு நட்சத்திர பூ, 3 கிராம்பு, ஒரு துண்டு பட்டை, 2 ஏலக்காய் மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் தயிரை நன்கு அடித்து அதில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.
  • 5 நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு கை அளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் முதலில் சென்னாவை ஊற்றி அடுத்து சிறிதளவு நாம் செய்து வைத்திருக்கும் சாதத்தை போடவும்.
  • அடுத்து அதன் மேலே நம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு மீதமுள்ள சாதத்தை அதில் போட்டு சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினாவை தூவி இருக்கமாக மூடியை போட்டு சுமார் 15 நிமிடம் வரை அதை மிதமான சூட்டில் வேக விடவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து பக்குவமாக சாதத்தை நன்கு கிளறி விட்டு சுட சுட அதை ஒரு தட்டில் வைத்து வெங்காய ரைத்தா வுடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சென்னா தம் பிரியாணி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

5 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment