Home Tamil பன்னீர் நெய் பிரட்டல்

பன்னீர் நெய் பிரட்டல்

0 comments
Published under: Tamil
பன்னீர்நெய் பிரட்டல் வெறுமனே நாம் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக உண்ணவும் உகந்தது.

பன்னீர் உலகம் முழுவதும்  வித விதமான உணவுகளாக செய்து உண்ணப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான பன்னீரை கொண்டு செய்யப்படும் பன்னீர் நெய் பிரட்டல். இதை நாம் பரோட்டா, நான், மற்றும் சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக உண்ணலாம். நாம் வழக்கமாக பரோட்டா, நான், மற்றும் சப்பாத்திக்கு உண்ணும் சைட் டிஷ்களுக்கு இவை ஒரு நல்ல மாற்று.

Paneer Ghee Roast

பன்னீர் நெய் பிரட்டலின்ஸ் பெஷல் என்னவென்றால் வெறும் பன்னீர் இருந்தால் போதும் நாம் தினம் தோறும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டே இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். பன்னீர் நெய் பிரட்டல் வெறுமனே நாம் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக உண்ணவும் உகந்தது.

இப்பொழுது கீழே பன்னீர் நெய் பிரட்டல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Paneer Ghee Roast
5 from 1 vote

பன்னீர் நெய் பிரட்டல்

பன்னீர்நெய் பிரட்டல் வெறுமனே நாம் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக உண்ணவும் உகந்தது.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Appetizer, Snack
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 400 கிராம் பன்னீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 5 பூண்டு பல்
  • 1 இஞ்சி துண்டு
  • 5 காஞ்ச மிளகாய்
  • 3 கிராம்பு
  • கொட்டைப்பாக்கு அளவு புளி
  • 2 மேஜைக்கரண்டி தயிர்
  • 1 மேஜைக்கரண்டி மல்லி விதை
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி சோம்பு
  • 1 மேஜைக்கரண்டி மிளகு
  • 1 மேஜைக்கரண்டி வெந்தயம்
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் பன்னீர், வெங்காயம், பூண்டு, மற்றும் இஞ்சியை நறுக்கி, புளியை சுமார் 15 நிமிடம் வரை ஊற விட்டு அதை கரைத்து வடிகட்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 5 காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (காரத்தை விரும்புவார்கள் மேலும் 2 காய்ந்த மிளகாயை சேர்த்து போட்டு கொள்ளலாம்.)
  • பின்பு அதே pan ல் மல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, வெந்தயம், மற்றும் கிராம்பை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  • அது ஆறியவுடன் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, இஞ்சி, மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு புளி தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.)
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.
  • நெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை போட்டு ஒரு புறம் பொன்னிறமானதும் அதை திருப்பி போட்டு அதனின் அனைத்து புறங்களிலும் பொன் நிறம் வருமாறு அதை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் பன்னீரை வறுக்க பயன்படுத்திய நெய்யையே அதில் ஊற்றவும்.
  • பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் அதில் தயிரை ஊற்றி நன்கு கலந்து விட்டு அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி நெய் தனியாக பிரிந்து வரும் வரை அதை கிண்டி கொண்டே இருக்கவும்.
  • நெய் தனியாக பிரிந்து வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு பன்னீர் நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை அதை வேக விடவும்.
  • 6 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி அதை பரோட்டாவுடனோ அல்லது நான்வுடனோ அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பன்னீர் நெய் பிரட்டல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment