Home Tamil வெஜிடபிள் நக்கட்ஸ்

வெஜிடபிள் நக்கட்ஸ்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
வெஜிடபிள் நக்கட்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஒரு உணவு.

நக்கட்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் முதன்மையான இடத்தில் இருப்பவை. மேலும் உணவு பிரியர்களுக்கும் இவை மிகவும் பிடித்தமான ஒரு உணவு. என்ன தான் நக்கட்ஸ்ஸில், சிக்கன் நக்கட்ஸ் மிகவும் பிரபலமாக இருந்தாலும் வெஜிடபிள் நக்கட்ஸ்க்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் நக்கட்ஸ் எவ்வாரோ அது போன்றே சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் நக்கட்ஸ்.

Vegetable Nuggets

வெஜிடபிள் நக்கட்ஸ் இல்லாத chat ஷாப்புகள் மற்றும் காலேஜ் கேன்டீன்களை நாம் காண்பது மிகவும் அரிது. ஏனென்றால் வெஜிடபிள் நக்கட்ஸ்க்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான். வெஜிடபிள் நக்கட்ஸ்ஸை பெரும்பாலும் நாம் chat ஷாப்புகளில் வாங்கி சுவைத்து இருப்போம். ஆனால் இதை நாம் வீட்டிலேயேவும் chat ஷாப்புகளில் கிடைக்கும் அதே சுவையில் செய்யலாம். இவை செய்வதற்கு நீண்ட நேரம் பிடித்தாலும் இதை சுவைக்கும் போது இதனின் சுவை நம்மை மெய்மறக்க வைத்து விடும்.

இப்பொழுது கீழே வெஜிடபிள் நக்கட்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான விளக்கத்தையும் காண்போம்.

Vegetable Nuggets
5 from 1 vote

வெஜிடபிள் நக்கட்ஸ்

வெஜிடபிள் நக்கட்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஒரு உணவு.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 4 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கேரட்
  • 4 to 6 பீன்ஸ்
  • ½ கப் பச்சை பட்டாணி
  • 1 பச்சை மிளகாய்
  • 150 கிராம் பன்னீர்
  • 4 ப்ரெட் ஸ்லைஸ்
  • 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • ½ மேஜைக்கரண்டி சீரக தூள்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • ½ மேஜைக்கரண்டி ஆம்ச்சூர் தூள்
  • 1 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 2 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • சிறிதளவு மிளகுத் தூள்
  • சிறிதளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து மற்றும் பன்னீரை துருவி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 நிமிடத்தில் இருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு தோலை உரித்து மசித்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சை பட்டாணியை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை வேக விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட் மற்றும் பீன்ஸை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை வேக விடவும்.
  • 6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பிறகு அதில் மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, ஆம்ச்சூர் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் 3 நிமிடம் வரை வேக விடவும்.
  • பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதில் நாம் துருவி வைத்திருக்கும் பன்னீர் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி அதை நன்கு ஒன்றோடு ஒன்று சேரும் வரை கிளறி விடவும்.
  • பிறகு ஒரு டிரேவை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி நாம் செய்து வைத்திருக்கும் மசாலாவை அதில் கொட்டி அதை நன்கு இறுக்கமாக டிரே முழுவதும் ஒரு கரண்டியின் மூலம் பரப்பி விட்டு அதை அப்படியே பிரிட்ஜில் சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை வைக்கவும்.
  • இப்பொழுது பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் சோள மாவு, மைதா மாவு, சிறிதளவு மிளகு தூள், மற்றும் கால் மேஜைக்கரண்டி அளவு உப்பை போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை சிறிது கெட்டியான பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் நாம் பிரிட்ஜில் வைத்திருக்கும் மசாலாவை எடுத்து அதை அவரவருக்கு விருப்பமான வடிவத்தில் ஒரு கத்தியின் மூலம் வெட்டி தனி தனி துண்டுகளாக ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து இந்த துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து நாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி நாம் செய்து வைத்திருக்கும் bread crumbs சில் நன்கு உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
  • அனைத்து துண்டுகளையும் இவ்வாறு செய்த பின் அதை பிரிட்ஜில் சுமார் 5 நிமிடம் வரை வைக்கவும்.
  • பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வெஜிடபிள் நக்கட்ஸ்ஸை பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் நாம் பிரிட்ஜில் வைத்து இருக்கும் நக்கட்ஸ் துண்டுகளை வெளியே எடுத்து பக்குவமாக எண்ணெய்யில் போடவும்.
  • பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான வெஜிடபிள் நக்கட்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter