சில்லி சிக்கன்

Tamil 0 comments

சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு Indo-Chinese உணவு வகை. இவை பெரும்பாலும் ஃபிரைட் ரைஸ் மற்றும் பிரியாணியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதை வெறுமனே ரசித்து உண்பதற்க்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவகங்களில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றால் அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால் அது மிகை அல்ல.

chilli chicken - சில்லி சிக்கன்

சில்லி சிக்கனை விரும்பி உண்பவர்கள் இதை பெரும்பாலும் துரித உணவகங்களில் ஆர்டர் செய்து தான் உண்கிறார்கள். ஆனால் இதை நாம் வெகு எளிதாக வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து விடலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அதனால் இதை நாம் சுகாதாரமான முறையில் வீட்டிலேயே செய்வதனால் நம் குழந்தைகளுக்கும் இதை எந்த ஒரு அச்சமுமின்றி கொடுக்கலாம்.

இப்பொழுது கீழே சில்லி சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

chilli chicken 380x380 - சில்லி சிக்கன்
0 from 0 votes

சில்லி சிக்கன் ரெசிபி

பல துரித உணவகங்களில் அதிகஅளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றால் அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால்அது மிகை அல்ல.
Prep Time20 mins
Cook Time20 mins
Total Time40 mins
Course: Appetizer, Snack
Cuisine: Indian, Indo-Chinese, North Indian

சில்லி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்

 • 500 கிராம் போன்லெஸ் சிக்கன்
 • 1 முட்டை
 • 1 பெரிய வெங்காயம்
 • 1 குடை மிளகாய்
 • 2 பச்சை மிளகாய்
 • 6 பூண்டு பல்
 • 2 துண்டு இஞ்சி
 • 4 மேஜைக்கரண்டி சோள மாவு
 • 4 மேஜைக்கரண்டி மைதா மாவு
 • 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
 • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
 • 1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
 • ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்
 • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
 • தேவையான அளவு மிளகாய் தூள்
 • தேவையான அளவு உப்பு
 • தேவையான அளவு எண்ணெய்
 • சிறிதளவு வெங்காய தாள்
 • சிறிதளவு கொத்தமல்லி

சில்லி சிக்கன் செய்முறை

 • முதலில் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதை கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • அடுத்து நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
 • கோழி கறியே தண்ணீர் விடும் என்பதால் அதில் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
 • பின்பு ஒரு bowl ல் முட்டையை உடைத்து ஊற்றி அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மைதா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு அடித்து மாவை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.
 • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கோழி கறியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் நன்கு முக்கி எண்ணெய்யில் போடவும்.
 • பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் ஆனதும் கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
 • இவ்வாறு மீதமிருக்கும் சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
 • பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
 • இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
 • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பெப்பர் தூளைப் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
 • பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.
 • பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.
 • 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
 • பின்பு அதை இறக்குவதற்கு முன் அதில் சிறிதளவு வெங்காய தாள் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Chilli Chicken Recipe in English

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*