Home Tamil மெது வடை

மெது வடை

0 comments
Published under: Tamil
பெரும்பாலும் காலை நேரங்களில் வெண் பொங்கலுடனோ அல்லது மாலை நேரங்களில் தேங்காய்ச் சட்னியுடனோ தான் சுவைக்க படுகிறது.

மெது வடை தமிழகத்தின் பாரம்பரியமான மற்றும் பிரபலமான ஒரு சிற்றுண்டி. இதனின் உள்ளே மெதுவாக மற்றும் வெளியே மொறு மொறுப்பாக இருக்கும் தன்மை தான் இது பலரின் விருப்பமான சிற்றுண்டியாக திகழ் வதற்கான காரணம். இவை பெரும்பாலும் காலை நேரங்களில் வெண் பொங்கலுடனோ அல்லது மாலை நேரங்களில் தேங்காய்ச் சட்னியுடனோ தான் சுவைக்க படுகிறது.

மெது வடையை சுட சுட இருக்கும் சாம்பாரில் போட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை ஊற விட்டு அதன் மேலே பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை தூவி அதை அசத்தலான சாம்பார் வடையாகவும் உண்ணலாம். கேரட்டை விரும்பி உண்ண கூடியவர்கள் கேரட்டையும் பொடியாகத் துருவி வெங்காயம் மற்றும் கொத்தமல்லியுடன் சேர்த்து தூவி கொள்ளலாம். சாம்பார் வடை பிரியர்கள் என்று தமிழகத்தில் ஒரு தனி கூட்டமே உண்டு என்றால் அது மிகையல்ல.

Medhu Vadai

சாம்பார் வடையை போன்றே வடையை பல விதமாக சுவைக்கலாம். மெது வடையை தயிரில் போட்டு தயிர் வடை ஆகவும் மற்றும் ரசத்தில் போட்டு ரச வடை ஆகவும் இதை உண்கிறார்கள்.

மெது வடையை முதல் முறை செய்யும் போது தான் அனுபவம் இல்லாததால் வடையை தட்டி போடுவதற்கு சிறிது நேரம் பிடிக்கும். மூன்றாவது அல்லது நான்காவது முறை இதை செய்யும் போது வடை காண மாவை அரைத்து விட்டால் போதும் வடையை வெகு எளிதாக தட்டி எண்ணெயில் போட்டு எடுத்து விடலாம்.

இப்பொழுது கீழே மெது வடை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Medhu Vadai
5 from 1 vote

மெது வடை

பெரும்பாலும் காலை நேரங்களில் வெண் பொங்கலுடனோ அல்லது மாலை நேரங்களில் தேங்காய்ச் சட்னியுடனோ தான் சுவைக்க படுகிறது.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, Snack
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 1 கப் உளுத்தம் பருப்பு
  • 1/4 கப் பச்சரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1/4 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1/2 மேஜைக்கரண்டி மிளகு
  • 1 துண்டு இஞ்சி
  • சிறிதளவு கொத்தமல்லி
  • சிறிதளவு கருவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து, வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு பின்பு அதனுடன் பச்சரிசியையும் போட்டு நன்கு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அந்த மாவில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்த அதனுடன் சீரகம், மிளகு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது கலந்து வைத்திருக்கும் மாவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (வெங்காயம் தண்ணீர் விடும் தன்மை கொண்டதால் வெங்காயத்தை வடை சுடுவதற்கு முன்பு கடைசியாக சேர்க்கவும்.)
  • அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடையை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுடுவதற்குல் ஒரு வாழை இலையில் வடையை தட்டு வதற்கு நன்கு எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். (கையில் தட்டி போட வாட்டம் பெற்றவர்கள் கையிலேயே எண்ணெய்யை தடவி வடையை தட்டி போடலாம்.)
  • எண்ணெய் சுட்டதும் அதில் ஒரு கை அளவு மாவை எடுத்து இலையில் வைத்து அதை பக்குவமாக தட்டி நடுவில் துளை இட்டு கடாயில் போடவும்.
  • பின்பு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு வடை நன்கு பொன்னிறமாக வந்ததும் அதை ஜல்லி கரண்டியின் மூலம் எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • கடாயின் அளவிற்கேற்ப வடைகளை ஒவ்வொன்றாக தட்டி போட்டு எடுத்து சுட சுட சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மெது வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment