முட்டை நக்கட்ஸ்

Tamil 0 comments

ஆம்லட், ஹாஃப் பாயில், பொடி மாஸ், கலக்கி, முட்டை போண்டா, இவ்வாறு பல விதமாக முட்டைகளை நாம் சுவைத்து இருப்போம். அந்த வகையில் முட்டையைக் கொண்டு ஒரு வித்தியாசமான முறையில் செய்யப்படும் ஒரு உணவு வகையை தான் நாம் இங்கு காண இருக்கிறோம். பொதுவாக நக்கட்ஸ் என்றாலே சிக்கன் துண்டுகளை கொண்டு தான் செய்வார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது அதை முட்டை கொண்டும் செய்யலாம் என்று.

egg nuggets 1024x576 - முட்டை நக்கட்ஸ்

வெகு குறைவான பொருட்களை கொண்டு மிக எளிதாக இதை செய்து விடலாம். பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை நேர சத்தான சிற்றுண்டியாக கொடுக்க இந்த மொறு மொறுப்பான முட்டை நக்கட்ஸ் மிகவும் உகந்தது. கடைகளில் கிடைக்கும் உடம்புக்கு கெடுதியான பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட இதை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து உடம்பிற்கு மிகவும் தேவையான புரதச்சத்து கொண்ட முட்டையால் செய்யப்படும் இந்த உணவை செய்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்.

இப்பொழுது கீழே மொறு மொறுப்பான முட்டை நக்கட்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

egg nuggets 380x380 - முட்டை நக்கட்ஸ்
0 from 0 votes

முட்டை நக்கட்ஸ் Recipe

முட்டையைக் கொண்டு ஒரு வித்தியாசமான முறையில் செய்யப்படும் ஒரு உணவு வகையை தான் முட்டை நக்கட்ஸ்.
Prep Time15 mins
Cook Time15 mins
Course: Appetizer, Breakfast, Snack
Cuisine: Indian
Keyword: egg nuggets

Ingredients for முட்டை நக்கட்ஸ்

 • 7 முட்டை
 • 2 பிரெட் ஸ்லைஸ்
 • 1 மேஜைக்கரண்டி ஒரு மிளகுத் தூள்
 • 1/2 மேஜைக்கரண்டி oregano தூள்
 • 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

How to make முட்டை நக்கட்ஸ்

 • முதலில் ஒரு bowl ல் 6 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து ஒரு சிறிய கிண்ணத்தில் இதை மாற்றி கொள்ளவும்.
 • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் பாகம் அளவு தண்ணீர் விட்டு சுட வைக்கவும்.
 • தண்ணீர் சிறிது சுட்டதும் அதில் கிண்ணத்தில் ஊற்றி வைத்திருக்கும் அடித்த முட்டைகளை கிண்ணத்தோடு வைத்து மூடி போட்டு சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
 • 8 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு குச்சியின் மூலம் முட்டை வெந்ததை உறுதி செய்த பின் அதை எடுத்து வெளியே வைத்து சிறிது நேரம் ஆற விடவும். (குச்சியை வெந்த முட்டையில் குத்தும் போது அடியில் முழுமையாக வெந்து இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து விடும். அடியில் வேகாத பட்சத்தில் மேலும் 2 நிமிடம் வேக வைக்கவும்.)
 • சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு கத்தியின் மூலம் அந்தப் பாத்திரத்தின் ஓரங்களில் வெட்டி வெந்த முட்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டு செவ்வக வடிவில் சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் 2 ஸ்லைஸ் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு நன்கு தூளாக அரைத்துக் கொள்ளவும்.
 • அடுத்து ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை மேஜைக்கரண்டி மிளகாய் தூள், oregano தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
 • பிறகு செவ்வக வடிவில் வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து இந்த முட்டையில் முக்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
 • பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த முட்டை நக்கட்ஸ் ஐ deep fry செய்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் இந்த முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு பொன் நிறம் வந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் போடவும். (அதிகமாக எண்ணெய் இருந்தால் டிஷ்யூ பேப்பர் அந்த எண்ணெய்யை உறிஞ்சி கொள்ளும்.)
 • இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மொறு மொறுப்பான முட்டை நக்கட்ஸ் தயார். இதை சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.
 • இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*