Home Tamil எக் ஃப்ரைட் ரைஸ்

எக் ஃப்ரைட் ரைஸ்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
ஃப்ரைட் ரைஸ்கள் சீனாவில் உதயம் ஆகியிருந்தாலும் இந்தியாவிலும் இவை மிகவும் பிரபலம்.

ஃப்ரைட் ரைஸ்கள் சீனாவில் உதயம் ஆகியிருந்தாலும் இந்தியாவிலும் இவை மிகவும் பிரபலம். இளம் வயதினருக்கு மிகவும் பிடித்தமான உணவு வகை துரித உணவு வகை. அதுவும் துரித உணவுகளில் ஃப்ரைட் ரைஸ் என்றால் கேட்கவே தேவையில்லை. ஃப்ரைட் ரைஸ்களில் பல வகை உண்டு. சிக்கன் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மஸ்ரூம் ஃப்ரைட் ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ். எத்தனை ஃப்ரைட் ரைஸ் வகைகள் இருந்தாலும் எக் ஃப்ரைட் ரைஸ்சுக்கு தனி மவுசு தான். எக் ஃப்ரைட் ரைஸ்கலோடு சிக்கன் பட்டர் மசாலா, சில்லி சிக்கன், அல்லது பன்னீர் பட்டர் மசாலா சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது.

Egg Fried Rice

எக் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்வதினால் இவை சத்தானவை. எனினும் வயதானவர்கள் மாதம் ஒரு முறையோ அல்லது ரெண்டு முறையோ உண்ண உகந்தது. ரெஸ்டாரண்ட்கள் அல்லது fast food களில் இதை உண்ணுவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து உண்டால் சுகாதாரமானது. வீட்டிலேயே ஃப்ரைட் ரைஸ் ஐ ரெஸ்டாரண்டில் கிடைப்பது போல் செய்து விடலாம். இப்பொழுது எக் ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு கீழே தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Egg Fried Rice
4.50 from 2 votes

எக் ஃப்ரைட் ரைஸ்

ஃப்ரைட் ரைஸ்கள் சீனாவில் உதயம் ஆகியிருந்தாலும் இந்தியாவிலும் இவை மிகவும் பிரபலம்.
Course: Main Course
Cuisine: Indo-Chinese
Keyword: egg fried rice

Ingredients

  • 250 கிராம் பாசுமதி அரிசி
  • 4 முட்டை
  • 1 கேரட்
  • 5 பீன்ஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 1 கையளவு ஸ்பிரிங் ஆனியன்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்
  • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
  • 8 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

Instructions

  • முதலில் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அரை மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து தண்ணீரை நன்கு வடிகட்டி கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். (அப்போதுதான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).
  • அடுத்து அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் போட்டு பாசுமதி அரிசியை 15 லிருந்து 20 நிமிடம் வேக வைக்கவும். (முக்கால் பாகம் வேகும் அளவிற்கு.)
  • சாதம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால்தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)
  • இப்பொழுது கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.)
  • எண்ணெய் சுட்டதும் அதில் ஒவ்வொன்றாக முட்டைகளை உடைத்து ஊற்றி சுமார் 4 லிருந்து 5 நிமிடம் முட்டையை சிறிது வேகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதே pan ல் நன்றாக பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை அதில் போடவும்.
  • பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.
  • தேவையான அளவிற்கு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
  • காய்கறி வெந்ததும் அடுத்து அதனுடன் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.
  • இப்பொழுது ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து அதனுடன் சேர்க்கவும். சாதம் உடையாமல் மெதுவாக கவனமாக கிளறவும்.
  • பிறகு ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை கிளறவும்.
  • பின்பு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிது ஸ்பிரிங் ஆனியன் ஐ மேலே தூவி அலங்கரிக்கவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான சுவையான எக் ஃப்ரைட் ரைஸ் தயார்.
  • இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.

Get the recipe of Egg Fried Rice in English

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter