Home Tamil தஹி வடா

தஹி வடா

0 comment
Published under: Tamil
தயிர் வடை ஒரு வித்தியாசமான மற்றும் அற்புதமான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். பண்டிகை மற்றும் பிறந்தநாள் விழாக்களின் போது குறைந்த நேரத்தில் எந்தவித சிரமமும் இன்றி செய்து முடிக்க கச்சிதமானது.

வடை நம்மில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. பொதுவாக நாம் மசால் வடை, மெது வடை, சாம்பார் வடை, மற்றும் கீரை வடை போன்ற வடைகளை சுவைத்திருப்போம். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான வட இந்திய தயிர் வடை. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான தயிர் வடை வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Dahi Vada

Dahi Vada / தஹி வடா

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பொதுவாக பண்டிகை காலத்தின் போது நம் அனைவரது இல்லங்களிலும் வடையை பலவிதமாக செய்து நாம் சுவைத்து இருப்போம். நாம் வழக்கமாக செய்யும் வடைகளுக்கு மாற்றாக இந்த வித்தியாசமான முறையில் செய்யப்படும் வட இந்திய தயிர் வடை இருக்கும். வரும் அடுத்த பண்டிகை நாளின் போது இந்த வட இந்திய தயிர் வடையை செய்து உங்கள் விருந்தினர்களை அசத்துங்கள். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நைசாக அரைக்கப்பட்ட உளுந்து மாவில் செய்யப்படும் இந்த வடைகள் நன்கு தண்ணீரில் ஊறி பின்பு தயிரில் ஊறி அதனுடன் நாம் சேர்க்கும் புதினா சட்னி, காஷ்மீர் மிளகாய் தூள், சாட் மசாலா, மற்றும் டாமரின்ட் சாசுடன் சேர்ந்து மிகுந்த சுவையாக இருக்கும். இதனுடன் நாம் சேர்க்கும் மாதுளை பழ விதைகள், ஓமப்பொடி, மற்றும் கொத்தமல்லி இதற்கு கூடுதல் சுவை கொடுக்கும். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்.

சில குறிப்புகள்:

உளுத்தம் பருப்பை அரைக்கும் பொழுது தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும். தண்ணீர் அதிகமாகி விட்டால் வடை உருட்டி போடுவதற்க்கு சிரமமாக இருக்கும்.

மாவு அரைக்க சில்லென்று இருக்கும் ஐஸ் தண்ணீரை பயன்படுத்தவும்.

சர்க்கரையை அரைத்து சேர்க்கவும். அரைத்த சர்க்கரையை சேர்ப்பதனால் அது எளிதில் மாவில் கரைந்து விடும்.

பொரித்து எடுத்த வடையை டிஷ்யூ பேப்பரின் மீது வையுங்கள். அப்படி செய்வதால் வடை கூடுதலாக எண்ணெய் குடித்திருந்தால் அதை டிஸ்யூ பேப்பர் உறிந்து கொள்ளும்.

புதினா சட்னி அரைக்க வெறும் புதினா இலையை மட்டும் பயன்படுத்தவும். தண்டுகளை தவிர்த்து விடவும்.

இவ் உணவின் வரலாறு:

தயிர் வடை இந்திய துணை கண்டத்தில் உதயமான மிகவும் பிரபலமான ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகும். தயிர் வடை பன்னிரண்டாம் நூற்றாண்டின் போது கர்நாடகாவை ஆட்சி செய்து கொண்டு இருந்த Someshvara III என்கின்ற மன்னரின் Manasollasa என்கின்ற என்சைக்ளோபீடியாவில் முதல் முதலாக குறிப்பிடப்பட்டிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றன.

தயிர் வடை என்று தமிழ்நாட்டில் அழைக்கப்படும் இவை கேரளாவில் Thairu Vada என்றும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் Perugu Vada என்றும், கர்நாடகாவில் Mosaru என்றும், ஒடிசாவில் Dahi Bara என்றும், கொல்கத்தாவில் Doi Bora என்றும், பஞ்சாபில் Dhai Bhalla என்றும், மற்றும் பல வட இந்திய மாநிலங்களில் Dahi Vada என்றும் அழைக்கப்படுகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

தயிர் வடை செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 10 லிருந்து 15 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 40 லிருந்து 45 நிமிடம் எடுக்கும்.

தயிர் வடையை முழுமையாக சுமார் 55 நிமிடத்தில் இருந்து 60 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

தயிர் வடையை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உண்ணலாம். இருப்பினும் நாம் இதை செய்யும் நாள் அன்றே உண்டு முடித்து விடுவது நல்லது.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

தயிர் வடை செய்ய நாம் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இருதயம், கிட்னி, எலும்பு, மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் மாதுளை பழத்தில் புரத சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், மற்றும் விட்டமின் C உள்ளது. இவை இருதயம், மூளை, மற்றும் சிறுநீர்ப்பாதை ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

இதில் நாம் பயன்படுத்தும் முந்திரி பருப்பில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கொழுப்பு சத்து, காப்பர், சிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம்,  மாங்கனீஸ், விட்டமின் K மற்றும் B 6 இருக்கிறது. இவை இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றும் டைப் 2 டயபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் பயன்படுத்தும் தயிரில் புரத சத்து, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் A, B 6, மற்றும் B12 உள்ளது. இவை எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் உபயோகிக்கும் இஞ்சியில் புரத சத்து, இரும்பு சத்து, நார் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, மற்றும் B 6 உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்த, உடல் சோர்வை நீக்க, எடையை குறைக்க, மற்றும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.

Dahi Vada
No ratings yet

தஹி வடா

தயிர் வடை ஒரு வித்தியாசமான மற்றும் அற்புதமான மாலை நேர ஸ்னாக்ஸ் ஆகும். பண்டிகை மற்றும் பிறந்தநாள் விழாக்களின் போது குறைந்த நேரத்தில் எந்தவித சிரமமும் இன்றி செய்து முடிக்க கச்சிதமானது.
Prep Time15 minutes
Cook Time40 minutes
Total Time55 minutes
Course: Appetizer, Breakfast, Snack
Cuisine: North Indian

தேவையான பொருட்கள்

 • 1 cup உளுத்தம் பருப்பு
 • 1 kg ஃபிரஷ் ஆன தயிர்
 • 1 cup புதினா இலைகள்
 • 5 பச்சை மிளகாய்
 • 1 துண்டு இஞ்சி
 • 1 பல் பூண்டு
 • 1 tsp யோகர்ட்
 • 2 tsp அரைத்த சர்க்கரை
 • 1/2 tsp சர்க்கரை
 • 1/4 tsp காஷ்மீர் மிளகாய் தூள்
 • 1/4 tsp சாட் மசாலா
 • 1/2 டாமரின்ட் சாஸ்
 • தேவையான அளவு உப்பு
 • தேவையான அளவு மாதுளை பழம் விதைகள்
 • தேவையான அளவு முந்திரிப் பருப்பு
 • தேவையான அளவு உலர் திராட்சை
 • தேவையான அளவு ஓமப்பொடி
 • தேவையான அளவு கொத்தமல்லி
 • தேவையான அளவு ஐஸ் தண்ணீர் மற்றும் சாதா தண்ணீர்

செய்முறை

 • முதலில் ஒரு bowl லை எடுத்து அதில் உளுத்தம் பருப்பை போட்டு அதை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
 • இப்பொழுது பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரையை நன்கு நைசாக அரைத்து, மற்றும் மாதுளை பழத்தை உரித்து விதைகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
 • அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் புதினா இலைகள், 2 பச்சை மிளகாய், 1/2 துண்டு இஞ்சி, பூண்டு, உப்பு, சர்க்கரை, மற்றும் யோகர்ட்டை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 • 2 மணி நேரத்திற்க்குப் பிறகு நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை மிக்ஸி ஜாரின் சைசுக்கு ஏற்ப அதில் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் 3 பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் உப்பை சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது அந்த மாவில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
 • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் தயிரை ஊற்றி உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை நன்கு அடிக்கவும்.
 • பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
 • இப்போது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடையை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாவில் சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கவனமாக எண்ணெய்யில் போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
 • அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் திருப்பிவிட்டு அந்தப் புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பரை விரித்து அதன் மேலே வைக்கவும்.
 • வடைகளை மொத்தமாக பொரித்து முடித்த பிறகு ஒரு bowl லில் தண்ணியை எடுத்து நாம் பொரித்து வைத்திருக்கும் வடைகளை அந்த தண்ணீரில் போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை ஊற விடவும்.
 • 5 நிமிடத்திற்க்குப் பிறகு அந்த வடைகளை எடுத்து நம் கைகளின் நடுவே வைத்து மெதுவாக அழுத்தி அதில் இருக்கும் தண்ணீரை எடுக்கவும்.
 • பின்பு நாம் bowl லில் வைத்திருக்கும் தயிரை ஒருமுறை நன்கு கலந்து விட்டு அதில் இந்த வடைகளை சேர்த்து பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 மணி நேரம் வரை ஊற விடவும்.
 • 2 மணி நேரத்திற்க்கு பிறகு அதை எடுத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னி, டாமரின்ட் சாஸ், காஷ்மீர் மிளகாய் தூள், சாட் மசாலா, மாதுளை பழம் விதைகள், ஓமப்பொடி, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விடவும்.
 • அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான தயிர் வடை ரெடி. இதை உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

தயிர் வடை செய்வதற்கான மாவு மற்றும் புதினா சட்னியை நாம் முந்தைய நாள் இரவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாமா?

தாராளமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு தயார் செய்து வைத்துக் கொண்டால் தயிர் வடை செய்வது மிக எளிதாக இருக்கும்.

தயிர் வடையை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

உங்களுக்கு காரம் விருப்பம் என்றால் கூடுதலாக ரெண்டு பச்சை மிளகாய் உளுத்தம் பருப்புடன் சேர்த்து போட்டு அரைத்துக் கொள்ளவும். அல்லது உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்ப காஷ்மீர் மிளகாய் தூளை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

தயிர் வடையில் ஓமப்பொடிக்கு பதிலாக நாம் வேறு ஏதேனும் சேர்க்கலாமா?

தாராளமாக சேர்க்கலாம். உங்களுக்கு ஓமப்பொடி விருப்பம் இல்லை என்றால் அதை தவிர்த்து விட்டு காரா பூந்தியை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

தயிர் வடைக்கு நாம் புதினா சட்னியை கட்டாயம் பயன்படுத்த வேண்டுமா?

கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் இந்த புதினா சட்னி ஒரு விதமான புளிப்பு சுவையை இந்த தயிர்வடைக்கு ஏற்படுத்தும். அது மிகவும் நன்றாக இருக்கும்.

 

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter