வெங்காய சாதம்

By Praveen Kumar 1 comments
வெங்காய சாதம் மிகவும் சுவையான உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

மிகவும் சுவையான உணவை குறைந்த நேரத்தில் சமைத்து உண்டு மகிழ்வது யாருக்குத்தான் பிடிக்காது? அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாசுமதி அரிசி, வெங்காயம், மற்றும் வேர்கடலை கொண்டு குறைந்த நேரத்தில் மிகுந்த எளிமையான முறையில் செய்யப்படும் வெங்காய சாதம். என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான வெங்காய சாதம் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும். 

Onion Rice
Onion Rice

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்: 

நாம் அனைவரிடமும் அவசர காலகட்டத்தில் குறுகிய நேரத்தில் செய்து முடிப்பதற்கு ஏற்ப உணவு பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலில் நாம் இந்த வெங்காய சாதத்தை சேர்த்துக் கொள்ளலாம். அவசர வேளையில் நாம் காலையில் அலுவலகங்களுக்கு கிளம்பி செல்லும்போது அல்லது நம் பிள்ளைகளுக்கு குறைந்த நேரத்தில் மதிய உணவை தயார் செய்து ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்புவதற்கு இந்த வெங்காய சாதம் மிகவும் உகந்தது. இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

நன்கு வறுத்த வேர்க்கடலை மற்றும் கடலைப்பருப்புடன் நாம் சேர்க்கும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், கடுகு, பெருங்காய தூள், மற்றும் புளி தண்ணீர் போன்ற சுவையூட்டிகள் நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து ஒரு அருமையான கலவை ஆகி இருக்கும். அதனுடன் நாம் சேர்க்கும் உலர்ந்த பாசுமதி அரிசி ஒரு அசத்தலான உணவு உண்ணும் அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தும்.

சில குறிப்புகள்: 

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும.

பாசுமதி அரிசியை முதலில் முக்கால் பாகம் (20 லிருந்து 25 நிமிடம்) மட்டும் வேக வைக்கவும். சாதம் வெந்ததும் தண்ணீரை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். 

பூண்டை அதிகம் விரும்பாதவர்கள் ரெண்டு அல்லது மூன்று பல் பூண்டை மட்டும் பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

இவ் உணவின் வரலாறு:

இந்த வெங்காய சாதம் மத்திய கிழக்கு அல்லது மத்திய ஆசியாவில் உதயமாகியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இவை சவுதி அரேபியா அல்லது பக்ரைன் நாடுகளில் உதயமாகி இருக்கலாம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன. இன்றைக்கும் சவுதி அரேபியாவில் இந்த வெங்காய சாதம் Mahmous என்ற பெயரில் செய்து மக்களால் சுவைக்கப்படுகிறது. காலப்போக்கில் இந்த வெங்காய சாதம் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் அந்தந்த பகுதிக்கேற்ற உணவு முறையின் படி மக்களால் செய்து சுவைக்கப்படுகிறது.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

வெங்காய சாதம் செய்ய தயாரிப்பு பணிகள் மேற்கொள்ள சுமார் 5 லிருந்து 10 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 15 லிருந்து 20 நிமிடம் எடுக்கும். 

வெங்காய சாதத்தை முழுமையாக சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

இதை ஒற்றிய உணவுகள்: 

  • தக்காளி சாதம்
  • புதினா சாதம்
  • தேங்காய் சாதம்
  • பூண்டு சாதம்
  • எலுமிச்சை சாதம்
  • கேரட் சாதம்

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்: 

வெங்காய சாதம் செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது. 

நாம் இதில் சேர்க்கும் கடலை பருப்பில் புரத சத்து, நார் சத்து, மற்றும் விட்டமின் B இருக்கிறது.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நாம் இதில் சேர்க்கும் கடுகில் இரும்பு சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், காப்பர், ஜிங்க், விட்டமின் A, C, மற்றும் K உள்ளது.

இதில் நாம் சேர்க்கும் சீரகத்தில் இரும்பு சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B6 உள்ளது. இவை சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

 

Onion Rice
5 from 1 vote

வெங்காய சாதம்

வெங்காய சாதம் மிகவும் சுவையான உணவு. இதை வெகு எளிதில் குறைந்த நேரத்திலேயே செய்து முடித்து விடலாம். இவை லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time5 minutes
Cook Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, Main Course
Cuisine: South Indian

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 1/2 cup வறுத்த வேர்க்கடலை
  • 2 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 முழு பூண்டு
  • 2 tsp கடலை பருப்பு
  • 1/4 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp கடுகு
  • 1/4 tsp பெருங்காய தூள்
  • 1 tsp உப்பு
  • 1/4 cup புளி தண்ணீர்
  • தேவையான அளவு கருவேப்பிலை
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் ஒரு கப் பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இப்பொழுது வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை நறுக்கி வைத்து பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு சிறு துண்டு புளியை சுமார் பத்து நிமிடம் வரை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
  • பின்பு அதில் 1/2 tsp உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு 20 இல் இருந்து 25 நிமிடம் வரை அதை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு pan ஐ எடுத்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சற்று சூடானதும் அதில் கடுகு, சீரகம், கடலை பருப்பு, மற்றும் வேர்க்கடலையை போட்டு வேர்க்கடலை நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • வேர்க்கடலை பொன்னிறமானதும் அதில் நாம் உரித்து வைத்திருக்கும் பூண்டு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து சுமார் இரண்டில் லிருந்து மூன்று நிமிடம் வரை அதை வதக்கவும்.
  • மூன்று நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், 1/2 tsp உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்யை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • அடுத்து அதில் கருவேப்பிலை மற்றும் நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் 1/4 cup அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் மூன்றி லிருந்து நான்கு நிமிடம் வரை வேக வைக்கவும்.
  • நான்கு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து பக்குவமாக சாதம் உடையாதவாரு சுமார் ரெண்டு நிமிடம் வரை அதை கிளறி விடவும்.
  • ரெண்டு நிமிடத்திற்க்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விடவும்.
  • அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான வெங்காய சாதம் ரெடி. இதை சுட சுட உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்: 

வெங்காய சாதம் செய்ய நாம் சாதா அரிசியையும் பயன்படுத்தலாமா?

தாராளமாக பயன்படுத்தலாம். பாசுமதி அரிசியை சேர்த்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். அதுமட்டுமின்றி அதில் பல சத்துக்களும் நிறைந்து இருக்கிறது.

வெங்காய சாதத்தில் நாம் வேறு ஏதேனும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?

தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். வேக வைத்த பீன்ஸ், உருளைக்கிழங்கு, மற்றும் கேரட் போன்ற காய்கறிகளை நாம் இதனுடன் சேர்த்து சமைக்கலாம்.

வெங்காய சாதத்தை இன்னும் காரமாக ஆக்குவது எப்படி?

நீங்கள் அதிக காரத்தை விரும்புபவர் என்றால் கூடுதலாக இரண்டு பச்சை மிளகாய்யை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளையும் பயன்படுத்தலாம்.

வெங்காய சாதத்தில் சேர்க்கும் வேர்கடலை நமக்கு அலர்ஜி என்றால் அதை மட்டும் தவிர்த்து விடலாமா அதற்கு பதிலாக நாம் வேறு ஏதேனும் பயன்படுத்தலாமா?

உங்களுக்கு வேர்க்கடலை அலர்ஜி அல்லது வேர்க்கடலையை விரும்பாதவர் என்றால் அதை தவிர்த்து விடலாம். அதற்கு பதிலாக கூடுதலாக 1/2 tsp கடலை பருப்பு அல்லது பட்டர் பீன்சை சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காய சாதத்திற்கு உகந்த சைடிஷ் எவை?

உருளைக்கிழங்கு இதற்கு படு கட்சிதமான சைடிஷ் ஆக இருக்கும்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

1 comment

Avatar of Kamalee
Kamalee June 10, 2026 - 9:39 am

5 stars
Thanks for sharing this; it was a hit with the whole family!

Reply
5 from 1 vote

Leave a Comment