Home Tamil சிக்கன் கிரேவி

சிக்கன் கிரேவி

0 comment
Published under: Tamil
பெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும்சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது.

சிக்கன் கிரேவி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு.  இவை அசைவ பிரியர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. சிக்கன் கிரேவியை இந்தியாவிலேயே வெவ்வேறு இடங்களில் அங்கங்கு இருக்கும் சமையல் முறைக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.

Chicken Gravy / சிக்கன் கிரேவி

Chicken Gravy / சிக்கன் கிரேவி

சிக்கன் கிரேவியை பொதுவாக மக்கள் சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான், புல்கா, பூரி, தோசை, இட்லி போன்றவைக்கு சைடிஷ் ஆக இதை சுவைக்கிறார்கள். சிக்கன் கிரேவி நாம் சாதத்தில் ஊற்றி உண்பதற்கும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் பலரையும் கவர்ந்தது சிக்கன் கிரேவி பரோட்டா காம்பினேஷன் தான். பரோட்டாவை பிய்த்து போட்டு அதில் சிக்கன் கிரேவியை ஊற்றி பிரட்டி உண்ணும் சுவையே சுவை தான். அதனாலேயே பெரும்பாலுமான உணவு பிரியர்களின் பிடித்தமான உணவுகளில் இந்த காம்பினேஷன் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

சிக்கன் கிரேவியின் ஸ்பெஷல் என்னவென்றால் பெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது. சிக்கன் கிரேவியில் நாம் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடாமல் லெக்பீஸ் மற்றும் போன்லெஸ் சிக்கனை கொண்டு செய்தால் சிக்கன் கிரேவி இன்னும் அட்டகாசமாக இருக்கும். அவ்வாறு செய்தால் சிக்கன் கிரேவியில் இருக்கும் சிக்கனை நம் குழந்தைகளும் மீண்டும் மீண்டும் கேட்டு சுவைப்பார்கள்.

இப்பொழுது கீழே சிக்கன் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chicken Gravy / சிக்கன் கிரேவி
5 from 1 vote

சிக்கன் கிரேவி

பெயரை கேட்டதும் பலரது நாவில் எச்சில் ஊற வைக்கும்சுவை கொண்ட இவை உடம்புக்கு மிகவும் நல்லது.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: Tamil, Tamil Nadu
Keyword: Chicken Gravy

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் சிக்கன்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 6 to 7 காய்ந்த மிளகாய்
  • 8 to 10 முந்திரிப் பருப்பு
  • 1 துண்டு பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  • ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  • 1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் முந்திரி பருப்பை போட்டு முந்திரி பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
  • முந்திரி பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து அப்படியே ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, மற்றும் ஏலக்காயை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
  • அரை நிமிடத்திற்கு பிறகு அதில் லேசாக தண்ணீர் தெளித்து மசாலாவை நன்கு கிண்டி விட்டு பின்பு அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிக்கன் நன்கு மசாலாவோடு சேருமாறு அதை கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும். (எண்ணெய் பிரிந்து வருவதற்கு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் எடுக்கலாம்.)
  • மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • 6 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிக்கன் கிரேவியை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் கரம் மசாலா மற்றும் கசூரி மேத்தியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் கிரேவியை சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter