சோயா சங்க் 65

Tamil 0 comments

65 உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. அது மட்டுமின்றி உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு எப்பொழுதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு. 65 களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் 65, ஃப்ஷ் 65, பன்னீர் 65, மற்றும் மஷ்ரூம் 65 மிகவும் பிரபலமானவை. ஆனால் இன்று இங்கு நாம் காண இருப்பது வித்தியாசமான சோயா சங்க் 65.

soya chunks 65 - சோயா சங்க் 65
Image via YouTube

சோயா சங்க் 65 யின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெறும் சோயா சங்க், சோள மாவு, கடலை மாவு, மற்றும் அரிசி மாவை வைத்தே மிக சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் ஆகாது. அது மட்டுமின்றி சோயா சங்குகளில் உடம்புக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது. அதனால் நம் குழந்தைகளுக்கு சோயா சங்க் 65 யை எந்த ஒரு அச்சமுமின்றி செய்து கொடுக்கலாம். அவர்களும் அதை கட்டாயம் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

இப்பொழுது கீழே சோயா சங்க் 65 செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

soya chunks 65 380x380 - சோயா சங்க் 65
0 from 0 votes

சோயா சங்க் 65 ரெசிபி

சோயா சங்குகளில் உடம்புக்கு மிகவும் அவசியமானபுரதச்சத்து அதித அளவு இருப்பதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது.
Prep Time15 mins
Cook Time15 mins
Total Time30 mins
Course: Snack
Cuisine: Indo-Chinese, South Indian
Keyword: evening snack

சோயா சங்க் 65 செய்ய தேவையான பொருட்கள்

 • 1 கப் சோயா சங்க்
 • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
 • 2 மேஜைக்கரண்டி கடலை மாவு
 • 1 மேஜைக்கரண்டி அரிசி மாவு
 • 3 பல் பூண்டு
 • 1 துண்டு இஞ்சி
 • ½ எலுமிச்சம் பழம்
 • ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
 • 1 சிட்டிகை பெருங்காய தூள்
 • தேவையான அளவு மிளகாய் தூள்
 • தேவையான அளவு எண்ணெய்
 • தேவையான அளவு உப்பு
 • சிறிதளவு கருவேப்பிலை

சோயா சங்க் 65 செய்முறை

 • முதலில் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
 • அடுத்து ஒரு பத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோயா சங்குகளை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு போட்டு அதை சுட வைக்கவும்.
 • தண்ணீர் சுட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் சோயா சங்குகளை போட்டு அதை சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
 • 30 நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் சோயா சங்குகளை எடுத்து அதை நன்றாக பிழிந்து அதில் இருக்கும் தண்ணியை முற்றிலுமாக எடுத்த பின் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
 • பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் பெருங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
 • பின்னர் அதில் சோள மாவு, கடலை மாவு, மற்றும் அரிசி மாவை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து சோயா சங்குகள் நன்கு மாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விடவும்.
 • பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோயா சங்குகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப நாம் கலந்து வைத்திருக்கும் சோயா சங்குகளை பக்குவமாக எண்ணெய்யில் போட்டு அது ஒரு புறம் பொன்னிறம் ஆனதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும்.
 • சோயா சங்குகள் இரு புறமும் நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
 • இவ்வாறு மீதமுள்ள சோயா சங்குகளையும் பக்குவமாக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து எண்ணெய்யை வடித்து தட்டில் வைத்து கொள்ளவும்.
 • பின்பு அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சூடாக இருக்கும் போதே அதில் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து அதை சோயா சங்க் 65 வுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை கெட்டப்புடன் சுட சுட பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுபாக இருக்கும் சோயா சங்க் 65 தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*