Home Tamil க்ரில்டு ஹரிசா பன்னீர்

க்ரில்டு ஹரிசா பன்னீர்

0 comment
Published under: Tamil
உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு அந்த அளவிற்குவரவேற்பு உண்டு.

நாம் பொதுவாக பன்னீரை பல விதமாக சமைத்து உண்டு இருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பன்னீர்ரை வைத்து வித்தியாசமாக செய்யப்படும் க்ரில்டு ஹரிசா பன்னீர். இவை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. உலகில் இருக்கும் அனைத்து பிரபலமான உணவகங்களிலும் க்ரில்டு ஹரிசா பன்னீர் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு அந்த அளவிற்கு வரவேற்பு உண்டு.

Grilled Harissa Paneer

இப்பொழுது கீழே க்ரில்டு ஹரிசா பன்னீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Grilled Harissa Paneer
5 from 1 vote

க்ரில்டு ஹரிசா பன்னீர்

உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு அந்த அளவிற்குவரவேற்பு உண்டு.
Prep Time30 minutes
Cook Time30 minutes
Total Time1 hour
Course: Appetizer, Snack
Cuisine: North Indian

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் பன்னீர்
  • 4 உருளைக்கிழங்கு
  • 200 ml ப்ரஷ் க்ரீம்
  • ½ கப் கேரட்
  • ½ கப் மஷ்ரூம்
  • ½ கப் பிரக்கோலி
  • சிவப்பு குடை மிளகாய்
  • 8 to 10 காய்ந்த மிளகாய்
  • 5 to 7 பல் பூண்டு
  • 1 எலுமிச்சம் பழம்
  • 2 மேஜைக்கரண்டி mixed herb
  • 1 மேஜைக்கரண்டி ஓமம்
  • 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
  • தேவையான அளவு கருப்பு மிளகு தூள்
  • தேவையான அளவு ஆலிவ் ஆயில்
  • தேவையான அளவு வெண்ணெய்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

  • முதலில் கேரட், மஷ்ரூம், பிரக்கோலி, மற்றும் அரை சிகப்பு குடை மிளகாயை நறுக்கி, உருளைக்கிழங்கை சதுர வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிண்டி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும். (உருளைக்கிழங்கை நன்கு முழுமையாக வேக வைப்பது அவசியம்.)
  • 20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் இருக்கும் ஒரு கிழங்கை எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து ஒரு மேஜைக்கரண்டியின் மூலம் நசுக்கினால் அது நன்கு மாவு போல் நசுக்க வரவேண்டும்.
  • உருளைக்கிழங்கை மாவு போல் நசுக்க வருவதை உறுதி செய்த பின் அடுப்பை அணைத்து விட்டு அதில் இருக்கும் தண்ணீரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி உருளைக்கிழங்கை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த உருளைக்கிழங்கை எடுத்து ஒரு சல்லடையில் போட்டு அதை நன்கு நசுக்கி வடிகட்டியின் மூலம் திரி திரியாக வெளியே வரும் கிழங்கை ஒரு கிண்ணத்தில் பிடித்து கொள்ளவும்.
  • பின்பு அந்த கிழங்கில் கால் கப் அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு மசித்து விடவும்.
  • பிறகு அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூளை தூவி அதை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கிரீமை ஊத்தி பபுள்ஸ் வரும் வரை அதை சுட வைக்கவும்.
  • பின்னர் அதை எடுத்து நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.
  • இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் grill plate ஐ வைத்து அதில் ஒரு சிவப்பு குடை மிளகாயை எடுத்து வைத்து அது லேசாக கருப்பாக மாறும் வரை அதை சூடாக்கவும்.
  • குடை மிளகாய் சிறிது கருப்பாக மாறியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அப்படியே ஆற விடவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து குடை மிளகாயை எடுத்து அதன் மேலே இருக்கும் கறுப்பு தோலை உரிக்கவும்.
  • பின்பு அதை நறுக்கி அதன் உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விட்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஓமம், கொத்தமல்லி விதை, மற்றும் சீரகத்தை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கிண்ணத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • பிறகு அதில் காய்ந்த மிளகாயை போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.
  • 20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஊறிய காய்ந்த மிளகாயை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நாம் வறுத்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள், சுட்டு நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், பூண்டு, சர்க்கரை, ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர், ஒரு மேஜைக்கரண்டி அளவு ஆலிவ் ஆயில், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு அரைக்கவும்.
  • பின்னர் இந்த பேஸ்ட்டை ஒரு bowl ல் கொட்டி பன்னீரை எடுத்து அதில் போட்டு அதை நன்கு அதன் மீது தடவி சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை அதை ஊற விடவும்.
  • 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு grill pan ஐ எடுத்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு ஆலிவ் ஆயிலை ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • ஆயில் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் பன்னீரை போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வறுக்கவும்.
  • 4 நிமிடத்திற்கு பிறகு பன்னீரை திருப்பி போட்டு அதை மீண்டும் 3 லிருந்து 4 நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு ஆலிவ் ஆயிலை ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • ஆயில் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், மஷ்ரூம், பாதி சிவப்பு குடை மிளகாய், மற்றும் பிரக்கோலியை போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வதக்கவும்.
  • 4 நிமிடத்திற்கு பிறகு அதில் mixed herbs, ஒரு சிட்டிகை கறுப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வதக்கவும்.
  • 3 நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கிளறி விட்டு பின்பு அடுப்பை அணைத்து அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கவும்.
  • பின்பு நாம் வறுத்து வைத்திருக்கும் பன்னீரை நீளவாக்கில் நறுக்கி அதை ஒரு தட்டில் வைத்து அதனுடன் நாம் செய்து வைத்திருக்கும் காய்கறி, மற்றும் மசித்த உருளைக்கிழங்கை வைத்து அதை பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் அட்டகாசமான க்ரில்டு ஹரிசா பன்னீர் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter