Home Tamil கிரில்டு மஷ்ரூம் உடன் புதினா சட்னி

கிரில்டு மஷ்ரூம் உடன் புதினா சட்னி

0 comment
Published under: Tamil
ஒரு வித்தியாசமான கிரில்டு மஷ்ரூம் மற்றும் அதை தொட்டு சாப்பிடுவதற்குஅசத்தலான புதினா சட்னி

பொதுவாக நாம் மஷ்ரூமை பல விதமாக செய்து சுவைத்திருப்போம். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது மஷ்ரூமை கொண்டு செய்யப்படும் ஒரு வித்தியாசமான கிரில்டு மஷ்ரூம் மற்றும் அதை தொட்டு சாப்பிடுவதற்கு அசத்தலான புதினா சட்னி. இதை நாம் வெகு சுலபமாக செய்து ஒரு அட்டகாசமான மாலை நேர சிற்றுண்டியாக சுவைக்கலாம்.

கிரில்டு மஷ்ரூம் (Grilled Mushrooms)

மஷ்ரூம்மில் பல சத்துக்கள் உண்டு குறிப்பாக பெரும்பாலும் மாமிசத்தில் மட்டும் கிடைக்கப்படும் விட்டமின் டி இதில் அதிகம் உண்டு. அதனால் இவை உடம்பிற்கும் மிகவும் சத்தானது. அது மட்டுமின்றி மஷ்ரூம் வேகுவதற்கும் வெகு நேரம் எடுக்காததால் இதை நாம் குறைந்த நேரத்திலேயே எந்த ஒரு சிரமமுமின்றி மிக எளிதாக செய்து விடலாம்.

இப்பொழுது கீழே கிரில்டு மஷ்ரூம் புதினா சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

கிரில்டு மஷ்ரூம் (Grilled Mushrooms)
5 from 2 votes

கிரில்டு மஷ்ரூம் உடன் புதினா சட்னி

ஒரு வித்தியாசமான கிரில்டு மஷ்ரூம் மற்றும் அதை தொட்டு சாப்பிடுவதற்குஅசத்தலான புதினா சட்னி
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian

தேவையான பொருட்கள்

  • 450 கிராம் மஷ்ரூம்
  • கப் தயிர்
  • ½ பெரிய வெங்காயம்
  • 1 to 2 பச்சை மிளகாய்
  • பல் பூண்டு
  • துண்டு இஞ்சி
  • 5 காஞ்ச மிளகாய்
  • 7 to 8 கிராம்பு
  • 5 ஏலக்காய்
  • 1 துண்டு பட்டை
  • 1 ஜாதிக்காய்
  • 2 பீஸ் ஜாவித்திரி
  • 1 மேஜைக்கரண்டி தனியா
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1 மேஜைக்கரண்டி மிளகு
  • 1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
  • 1 மேஜைக்கரண்டி இஞ்சி பவுடர்
  • 1 மேஜைக்கரண்டி பூண்டு பவுடர்
  • ¼ மேஜைக்கரண்டி சாட் மசாலா
  • 1 எலுமிச்சம் பழம்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு வெண்ணெய்
  • சிறிதளவு புதினா
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் புதினாவை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் மஷ்ரூம்மை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், கிராம்பு, பட்டை, மிளகு, ஏலக்காய், ஜாவித்திரி, ஜாதிக்காய், கசூரி மேத்தி, மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அது நன்கு வாசம் வரும் வரை அதை வறுக்கவும்.
  • அது நன்கு வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு அதை சிறிது நேரம் ஆற விடவும்.
  • அது ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் இஞ்சி பவுடர் மற்றும் பூண்டு பவுடரை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் தயிர், அரை மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (சுமார் 2 லிருந்து 3 மேஜைக்கரண்டி சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  • பின்பு அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு நம் கைகளின் மூலம் அதை பக்குவமாக நன்கு கலந்து விட்டு அதை சுமார் 25 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு மேஜைக்கரண்டி தயிர், சாட் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மஷ்ரூமை எடுத்து அதை ஒவ்வொன்றாக iron Skewer ல் சொருகி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • Iron skewer க்கு பதிலாக wooden skewer ரை பயன்படுத்துவதாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் சுமார் 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  • இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய்யை ஊற்றி அதை உருக விடவும்.
  • வெண்ணெய் உருகியதும் அதில் நாம் மஷ்ரூம் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் iron skewer ரை எடுத்து pan ன் அளவிற்கேற்ப அதில் வைத்து கொள்ளவும்.
  • Skewer ரை தொடர்ச்சியாக திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் மஷ்ரூம் துண்டுகள் அனைத்து புறமும் சமமாக வெந்து இருக்கும்.
  • இதை அவனில் செய்வதாக இருந்தால் அவனில் சுமார் 450 டிகிரி பாரன்ஹீட்க்கு pre heat செய்து இந்த மஷ்ரூம் துண்டுகளோடு இருக்கும் Skewer களை ஒரு தட்டில் வைத்து அதை அவனில் வைத்து சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வேக விடவும்.
  • 10 நிமிடத்திற்கு பிறகு அவனில் இருந்து அந்த தட்டை கவனமாக வெளியே எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சிறிது கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து அதனுடன் நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னி வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான கிரில்டு மஷ்ரூம் புதினா சட்னி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter