சில்லி பேபி கார்ன்

By Praveen Kumar 1 comments
இதைநாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம்.

சில்லி பேபி கார்ன் ஒரு வித்தியாசமான மற்றும் அட்டகாசமான உணவு. சில்லி பேபி கார்னை நாம் ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், மற்றும் சாதத்துக்கு சைடிஷ் ஆகவோ அல்லது வெறுமனே ஒரு மாலை நேர சிற்றுண்டி ஆகவோ நாம் செய்து சுவைக்கலாம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று.

Chilli Baby Corn (சில்லி பேபி கார்ன்)

சில்லி பேபி கார்னின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி ஸ்கூலில் இருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த சில்லி பேபி கார்னை செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.

இப்பொழுது கீழே சில்லி பேபி கார்ன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Chilli Baby Corn (சில்லி பேபி கார்ன்)
5 from 1 vote

சில்லி பேபி கார்ன்

இதைநாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி செய்து விடலாம்.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian, Indo-Chinese, South Indian

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் பேபி கார்ன்
  • 4 மேஜைக்கரண்டி சோள மாவு
  • 3 மேஜைக்கரண்டி மைதா மாவு
  • ½ கப் ஸ்பிரிங் ஆனியன்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 குடை மிளகாய்
  • 3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு
  • 1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி
  • 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி வினிகர்
  • 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
  • ½ மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள்
  • ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் பேபி கார்ன், பச்சை மிளகாய், குடை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பேபி கார்னை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பேபி கார்னை போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.
  • 4 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரிலிருந்து பேபி கார்னை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சிறிது நேரம் ஆற விடவும்.
  • பேபி கார்ன் ஆறியதும் அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் லேசாக தண்ணீர் தெளித்து அதை நன்கு கலந்து விடவும். (சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.)
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த பேபி கார்னை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் பக்குவமாக பேபி கார்னை போட்டு அது லேசாக பொன் நிறம் ஆகும் வரை அதை வறுக்கவும்.
  • அது லேசாக பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அப்படியே வைத்திருக்கவும்.
  • 15 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து இந்த பேபி கார்னை மீண்டும் எண்ணெய்யில் போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை பொரித்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன், பூண்டு, மற்றும் இஞ்சியை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், வினிகர், வெள்ளை மிளகு தூள், சர்க்கரை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (100ml வரை தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
  • பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து அதில் சேர்த்து அது சிறிது கெட்டியாகும் வரை வதக்கவும்.
  • அது சிறிது கெட்டியானதும் அதில் பொரித்து எடுத்து வைத்திருக்கும் பேபி கார்னை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.
  • பின்னர் அதில் நறுக்கி வைத்திருக்கும் ஸ்ப்ரிங் ஆனியனை தூவி அதை நன்கு கிளறி விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான சில்லி பேபி கார்ன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

1 comment

Avatar of vasantha
vasantha July 31, 2020 - 8:52 pm

Super Recipes Thank You

Reply
5 from 1 vote (1 rating without comment)

Leave a Comment