Home Tamil பிரெட் போண்டா

பிரெட் போண்டா

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
பிரெட் போண்டா. மாலை நேரத்தில் ஒருகப் டீயுடன் இந்த பிரெட் போண்டாவை சுவைப்பது மிகவும் அருமையாக இருக்கும்.

போண்டா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.. குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் மவுசே தனி தான். போண்டாக்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக உருளைக்கிழங்கு போண்டா, வெங்காய போண்டா, பிரெட் போண்டா, சீஸ் போண்டா, மற்றும் அரிசி மாவு போண்டா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிரெட் போண்டா. மாலை நேரத்தில் ஒரு கப் டீயுடன் இந்த பிரெட் போண்டாவை சுவைப்பது மிகவும் அருமையாக இருக்கும்.

Bread Bonda / Bread Aloo Bonda

பிரெட் போண்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். கடைகளில் நாம் நம் குழந்தைகளுக்கு போண்டாவை வாங்கி கொடுப்பதை விட வீட்டிலேயே சுகாதாரமான முறையில் இந்த பிரட் போண்டாவை செய்து கொடுத்தால் அவர்களும் இதை விரும்பி உண்பார்கள். அவர்கள் வழக்கமாக உண்ணும் பிஸ்கட் மற்றும் processed food கலுக்கு இவை ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

இப்பொழுது கீழே பிரெட் போண்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Bread Bonda / Bread Aloo Bonda
5 from 1 vote

பிரெட் போண்டா

பிரெட் போண்டா. மாலை நேரத்தில் ஒருகப் டீயுடன் இந்த பிரெட் போண்டாவை சுவைப்பது மிகவும் அருமையாக இருக்கும்.
Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Snack
Cuisine: Indian, South Indian

தேவையான பொருட்கள்

  • தேவையான அளவு பிரெட் ஸ்லைஸ்
  • 3 உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • ¼ கப் பச்சை பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பூண்டு பல்
  • 1 இஞ்சி துண்டு
  • 1 கிராம்பு
  • 1 பட்டை துண்டு
  • ¼ மேஜைக்கரண்டி சோம்பு
  • ½ மேஜைக்கரண்டி சீரக தூள்
  • 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு மிளகாய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மற்றும் கொத்தமல்லியை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்
  • அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
  • 25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.
  • பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் சோம்பு, கிராம்பு, மற்றும் பட்டையை போட்டு வதக்கி நன்கு வாசம் வந்ததும் அதில் இருந்து கிராம்பு மற்றும் பட்டையை வெளியே எடுத்து விடவும்.
  • பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பச்சை பட்டாணி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் சீரகத் தூள், கரம் மசாலா, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து அதை நன்கு கலக்கி விட்டு தண்ணீரை கொதிக்க விடவும். (தண்ணீரை கவனமாக சேர்க்க வேண்டும் அதிகமாக சேர்த்து விட கூடாது.)
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி விட்டு அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை அதை வேக விடவும்.
  • தண்ணீர் வற்றியவுடன் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  • உருளைக்கிழங்கு மசாலா ஆறுவதற்குள் நாம் தேவையான அளவு பிரெட் ஸ்லைஸ்களை எடுத்து அதன் ஓரங்களை ஒரு கத்தியின் மூலம் அகற்றி விட்டு அதன் மூளைகளில் சிறிதளவு வெட்டி கொள்ளவும்.
  • பிறகு நாம் ஆற வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி வைத்து கொள்ளவும்.
  • பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை எடுத்து அதன் இரண்டு புறங்களிலும் லேசாக தண்ணீரில் நனைத்து அதை கைகளின் நடுவே வைத்து அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விடவும்.
  • பின்னர் நாம் பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை ஒவ்வொன்றாக இந்த பிரெட்களின் நடுவில் வைத்து அதை நன்கு உருண்டையாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த உருண்டைகளை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை கடாயின் அளவிற்கேற்ப போட்டு அது ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அதை நன்கு பொன் நிறம் வரும் வரை அதை பொரிக்கவும்.
  • அதை நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட சட்னியுடன் அல்லது கெட்சப்புடன்னோ பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பிரட் போண்டா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter