பிரைட் சில்லி இட்லி

By Praveen Kumar
இட்லி தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரியமான காலை உணவு. இட்லியை பல வகையாக செய்யலாம்.

Rice cakes என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இட்லி தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரியமான காலை உணவு. இட்லி, சாம்பார், சட்னி, மற்றும் வடை என்றால் தென்னிந்தியாவில் அது ஒரு டாப் காம்பினேஷன். உடம்பு சரியில்லாத நேரங்களில் மருத்துவர்கள் பெரும்பாலும் உண்ண அறிவுறுத்தும் உணவுகளில் இட்லி கட்டாயம் இடம் பிடித்திருக்கும். இட்லியை பல வகையாக செய்யலாம். அதில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் இட்லி, ரவையை கொண்டு செய்யப்படும் ரவை இட்லி, சாம்பார் இட்லி, 14 இட்லி, ஃப்ரைட் சில்லி இட்லி பிரபலமானது.

Fried Chilli Idli

இதில் இப்பொழுது நாம் காண இருப்பது ஃப்ரைட் சில்லி இட்லி. இதை வெகு சுலபமாக செய்து விடலாம். இதை காலை நேர டிபன் ஆகவோ அல்லது காலை டிபனுக்கு வைக்கும் இட்லி சில நேரங்களில் மீதம் ஆகி விட்டாலோ இவ்வாறு அதை ஃப்ரைட் சில்லி இட்லியாக மாலை நேரத்தில் டிபனாக செய்து உண்ணலாம்.

இப்பொழுது கீழே ஃப்ரைட் சில்லி இட்லி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.

Fried Chilli Idli
4.34 from 3 votes

பிரைட் சில்லி இட்லி

இட்லி தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரியமான காலை உணவு. இட்லியை பல வகையாக செய்யலாம்.
Prep Time15 minutes
Cook Time15 minutes
Course: Appetizer, Breakfast, Snack
Cuisine: South Indian

Ingredients

  • 5 இட்லி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 குடை மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • மிளகு தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பல் பூண்டு
  • 2 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
  • 2 மேஜைக்கரண்டி கெட்சப்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு

Instructions

  • முதலில் இட்லியை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டுடை பேஸ்ட் செய்து, வெங்காயம், மற்றும் குடை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு வடசட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து இட்லியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் வட சட்டியின் அளவிற்கு ஏற்ப அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள இட்லியை போட்டு பொரித்து இட்லி பொன்னிறமானதும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (இட்லியை டீப் ப்ரை செய்து விடக்கூடாது.)
  • அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து இரண்டு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்இன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
  • 2 நிமிடத்திற்கு பிறகு இதனுடன் கெட்சப் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து வதக்கவும்.
  • பின்பு பொரித்து எடுத்து வைத்திருக்கும் இட்லி துண்டுகளை இதில் போட்டு நன்கு கிளறவும்.
  • இட்லியை இறக்குவதற்கு முன் அரை மேஜைக்கரண்டி அளவு மிளகுதூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ஃப்ரைட் சில்லி இட்லி தயார்.
  • இதை ஒரு தட்டில் வைத்து அதன் மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
  • இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Sign up for our newsletter

Newsletter

Add Awesome Cuisine as a Preferred Source

Add Awesome Cuisine as Preferred Source on Google

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

4.34 from 3 votes (3 ratings without comment)

Leave a Comment