வாழைக்காய் சிப்ஸ்

Tamil

பொதுவாகவே உலகம் முழுவதும் சிப்ஸ்கலுக்கு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் சிப்ஸ்கலுக்கு இருக்கும் மவுசே தனி தான் என்றால் அது மிகையல்ல. அவ்வரிசையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு சிப்ஸ் வகை தான். வாழைக்காய் சிப்ஸ் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிப்ஸ் வகைகளில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. வாழைக்காய் சிப்ஸை பொதுவாக மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லது குழம்பு சாதத்திற்கு சைடிஷ்ஆகவோ உண்கிறார்கள்.

vazhakkai chips - வாழைக்காய் சிப்ஸ்

வாழைக்காய் சிப்ஸ் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கின்றன. உதாரணத்திற்கு இவை தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் முற்றிலும் வேறு மாதிரியாகவும் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழைக்காய் சிப்ஸ் என்று அழைக்கப்படும் இவை ஈக்குவேடார், தாய்லாந்து, மற்றும் பெருவில் Chifles என்றும், மற்றும் இந்தோனேசியாவில் kripik pisang என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாடுகளிலும் வாழைக்காய் சிப்ஸ் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

வாழைக்காய் சிப்ஸ்யின் ஸ்பெஷல் என்னவென்றால் இதனை எந்த ஒரு கடினமான செய்முறையுமின்றி மிக எளிதாக நாம் செய்து விடலாம். மேலும் ஒருமுறை இதை செய்தால் சுமார் 15 லிருந்து 20 நாட்கள் வரை ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும் போது எடுத்து உண்ணலாம். மேலும் ஸ்கூலில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இது வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்த அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மாலை நேர சிற்றுண்டியாகவும் இருக்கும்.

சிப்ஸ்களின் வரவேற்புக்கு அதனின் மொறு மொறுப்பு தன்மையே மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. அதனால் இதை பொரித்தவுடன் தேவையான அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு விட்டு மீதமுள்ள சிப்ஸை ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைத்து விடவும். இப்படி செய்தால் கடைசிவரை அது மொறு மொறுப்பாகவே இருக்கும்.

இப்பொழுது கீழே வாழைக்காய் சிப்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

vazhakkai chips 380x380 - வாழைக்காய் சிப்ஸ்
0 from 0 votes

வாழைக்காய் சிப்ஸ் ரெசிபி

வாழைக்காய் சிப்ஸை பொதுவாக மாலை நேர சிற்றுண்டியாகவோ அல்லதுகுழம்பு சாதத்திற்கு சைடிஷ்ஆகவோ உண்கிறார்கள்.
Prep Time45 mins
Cook Time20 mins
Total Time1 hr 5 mins
Course: Snack
Cuisine: South Indian

வாழைக்காய் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

 • 2 வாழைக்காய்
 • 1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1/4 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்
 • 1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்
 • ஒரு கை அளவு கருவேப்பிலை
 • தேவையான அளவு மிளகாய் தூள்
 • தேவையான அளவு உப்பு
 • தேவையான அளவு எண்ணெய்

வாழைக்காய் சிப்ஸ் செய்முறை

 • முதலில் 2 வாழைக்காயை எடுத்து தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரத்தில் இருந்து 40 நிமிடம் வரை ஊற விடவும்.
 • 40 நிமிடத்திற்கு பிறகு வாழைக்காயை எடுத்து அதை ரவுண்டாக சீவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (வாழைக்காயை அப்படியே எண்ணெயின் மேலே வைத்து சீவி விட பழக்கப்பட்டவர்கள் நேரடியாகவும் வாழைக்காயை சீவி விடலாம்.
 • அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.
 • எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் சீவி வைத்திருக்கும் வாழைக்காயை கடாயின் அளவிற்கேற்ப பக்குவமாக எண்ணெயில் போடவும்.
 • பின்பு ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு திருப்பி விட்டு கொண்டே இருக்கவும் அப்போது தான் அனைத்து புறங்களிலும் அது நன்றாக வெந்து வரும்.
 • வாழைக்காய் சிப்ஸ் நன்கு வெந்ததும் அதை கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு bowl ல் போடவும்.
 • மீதமுள்ள வாழைக்காயை போட்டு பொரித்து எடுப்பதற்கு முன் எண்ணெய்யை சூடான பதத்திற்கு கொண்டு வருவதற்கு சிறிது நேரம் அதை சுட விடவும்.
 • எண்ணெய் சுடுவதற்குல் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிப்ஸ் சூடாக இருக்கும் போதே அதில் சீரக தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
 • மொத்தமாக பொரித்து எடுத்த பின் மசாலாவை அதில் சேர்ப்பதை தவிர்க்கவும் ஏனென்றால் சூடாக இருக்கும் போதே அதில் மசாலாக்களை போட்டால் தான் மசாலா நன்கு சிப்ஸ்சோடு சேரும்.
 • அடுத்து எண்ணெய் சூடான பதத்தில் இருப்பதை உறுதி செய்த பின்னர் மீதமுள்ள வாழைக்காய்களை நாம் முன்பு செய்தது போன்ற எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து மசாலாக்களை தூவி நன்கு கலந்து விடவும்.
 • சிப்ஸுகளை பொரித்து எடுத்த பின்பு கருவேப்பிலையை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை உடனடியாக அணைத்து விட்டு கருவேப்பிலை நிறம் மாறுவதற்குல் அதை எடுத்து சிப்ஸ் உடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிப்ஸை சுட சுட பரிமாறவும்.
 • இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மொறு மொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

Vazhakkai Chips Recipe in English