Home Tamil ப்ரூட் கஸ்டட்

ப்ரூட் கஸ்டட்

Published: Last Updated on 0 comment
Published under: Tamil
ப்ரூட் கஸ்டட்மிகப் பிரபலமான சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் உணவு வகை.

ப்ரூட் கஸ்டட்மிகப் பிரபலமான ஒரு desserts வகை. இவை 19 ஆம் நூற்றாண்டின் போது இங்கிலாந்தில் உதயமானது என்று கூறப்படுகிறது. படிப்படியாக இதனின் சுவை மற்றும் எளிமையான செய்முறையாளும் உலகம் முழுவதும் சென்றடைந்து இருக்கிறது. பண்டிகை காலங்களிலோ அல்லது திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்து விட்டாலோ மிக எளிதாக செய்து அவர்களை அசர வைக்க கூடிய ஒரு உணவு வகை இவை. ஃப்ரூட் கஸ்டட்களில் இன்னொரு சிறப்பு என்ன வென்றால் இவை பழங்களை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் பல வகையான பழங்களை ஒன்றாக சேர்த்து ப்ரூட் கஸ்டட்ஆக செய்து அவர்களின் குழந்தைகளை மிக எளிதாக உண்ண வைத்து விடலாம்.

Fruit Custard Salad

அவரவர் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்குப் பிடித்தமான பழ வகைகளையும் ஒன்றாக இதில் சேர்த்து கொள்ளலாம். இதில் கூடுதலாக ஒரு வசதி என்ன வென்றால் அவர்களுக்கு பிடித்தமான பிளேவர் களிலும் சிரமமின்றி செய்து விடலாம். வெறும் நாம் சேர்க்கும் கஸ்டர்ட் பவுடரை மாற்றினால் போதும். கஸ்டட் பவுடர் பல பிளேவர்களில் கிடைக்கின்றது. அதில் வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச், சாக்லேட், ஸ்டாபெரி, கேசார் பிஸ்தா, மற்றும் கேசர் ஏலாசி பெரும்பாலானோருக்கு பிடித்தமான பிளேவர் ஆக திகழ்கின்றன.

பெரும்பாலும் மாலை நேரத்தில் அல்லது உணவுக்கு பின்பாக இவை உண்ணப்படுகிறது. பல பழ வகைகளை இதில் சேர்த்து இருப்பதினால் இவை மிக எளிதில் ஜீரணமாகிவிடும். இப்பொழுது கீழே ப்ரூட் கஸ்டட்செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.

Fruit Custard Salad
5 from 2 votes

ப்ரூட் கஸ்டட்

ப்ரூட் கஸ்டட்மிகப் பிரபலமான சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் உணவு வகை.
Course: Dessert
Cuisine: Indian
Keyword: Fruit Custard

Ingredients

  • 1/2 லிட்டர் பால்
  • 1/2 கப் மாதுளை பழம்
  • 1 ஆப்பிள்
  • 1 வாழை பழம்
  • 1/2 கப் பச்சை திராட்சை
  • 1/2 கப் கருப்பு திராட்சை
  • 2 மேஜைக்கரண்டி பேரிச்சம் பழம்
  • 1/2 கப் மாம்பழம்
  • 2 மேஜைக்கரண்டி கஸ்டட் பவுடர்
  • சர்க்கரை தேவையான அளவு
  • 1 மேஜைக்கரண்டி துருவிய பாதாம்
  • 1 மேஜைக்கரண்டி துருவிய பிஸ்தா

Instructions

  • முதலில் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம், மற்றும் மாம்பழத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் கலக்காத கெட்டியான பாலை ஊற்றி சுட வைக்கவும்.
  • பால் சுடுவதற்குல் ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி அளவு அவர் அவருக்கு பிடித்தமான ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரை போட்டு 4 லிருந்து 5 மேஜைக்கரண்டி அளவு பாலை சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கலக்கிக் கொள்ளவும்.
  • பால் சிறிது சுட்டதும் அதில் கலந்து வைத்திருக்கும் இந்த கஸ்டர்டு பவுடரை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். (சரியாக கலக்கவில்லை என்றால் கஸ்டட் பவுடர் அடியில் சென்று தங்கி விடும்.)
  • பின்பு பால் சிறிது நிறம் மாறியதும் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.
  • சர்க்கரை நன்கு கரைந்த பின் அடுப்பிலிருந்து பாலை இறக்கி நன்கு ஆற விடவும்.
  • பால் நன்கு ஆறியவுடன் அதில் தயார் செய்து வைத்திருக்கும் மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரிச்சம் பழம், மற்றும் மாம்பழத்தை ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் இந்த கலக்கிய ஃப்ரூட் கஸ்டர்டை அப்படியே எடுத்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும்.
  • இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் இதை ஊத்தி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை அதன் மேலே தூவி பரிமாறவும்.
  • இப்பொழுது உங்கள் சுவையான, சத்தான மற்றும் சில்லென்ற ப்ரூட் கஸ்டட்தயார்.
  • இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

 

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter