முட்டை இல்லாத ரவை கேக்

Tamil 0 comments

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு வகை கேக். இது மட்டுமின்றி கேக்குகள் இல்லாத கொண்டாட்டம் கொண்டாட்டங்களே இல்லை எனும் அளவிற்கு கேக்குகள் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது. அதுவும் குறிப்பாக கிறிஸ்மஸ் சீசன் என்றால் கேட்கவே தேவையில்லை. கேக்குகளின் மவுசு தானாக கூடி விடும். டிசம்பர் மாதம் வந்து விட்டாலே பேக்கரிகளில் வித விதமான கேக்குகளை நம்மால் காண முடியும். டிசம்பருக்கும் கேக்குகளுக்கும் அவ்வளவு பொருத்தம்.

eggless rava cake 1024x576 - முட்டை இல்லாத ரவை கேக்

பொதுவாக கேக்குகளில் முட்டை சேர்ப்பதனால் பெரும்பாலான சைவப் பிரியர்கள் கேக் உண்பதை தவிர்ப்பார்கள். அவர்களுக்காக ஸ்பெஷலாக இந்த eggless ரவை கேக் ரெசிப்பி. இது முட்டை சேர்த்து செய்யும் கேக்குகள் போன்றே இருப்பதால் அனைத்து தரப்பு கேக் பிரியர்களும் இதை உண்ணலாம். இவை செய்வதற்கு சிறிது நேரம் பிடித்தாலும் செய்வதற்கு மிகவும் சுலபமானது தான். இப்பொழுது கீழே ரவை கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தை காண்போம்.

eggless rava cake 380x380 - முட்டை இல்லாத ரவை கேக்
0 from 0 votes

முட்டை இல்லாத ரவை கேக் Recipe

டிசம்பர் மாதம் வந்து விட்டாலே பேக்கரிகளில் வித விதமான கேக்குகளை நம்மால் காண முடியும். டிசம்பருக்கும் கேக்குகளுக்கும் அவ்வளவு பொருத்தம்.
Course: Dessert
Cuisine: South Indian
Keyword: cake, christmas, eggless

Ingredients for முட்டை இல்லாத ரவை கேக்

 • 1 1/2 கப் ரவை
 • 1/2 கப் மைதா மாவு
 • 3/4 கப் சர்க்கரை
 • 1/2 கப் தயிர்
 • 1 கப் பால்
 • 1/2 கப் வெண்ணெய்
 • 3/4 மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 1/2 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா
 • 1 மேஜைக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்
 • 2 மேஜைக்கரண்டி நறுக்கிய டூட்டி ஃப்ரூட்டி
 • 2 மேஜைக்கரண்டி நறுக்கிய cranberries
 • 1 மேஜைக்கரண்டி நறுக்கிய பாதாம்
 • 1 மேஜைக்கரண்டி நறுக்கிய முந்திரி
 • 1 மேஜைக்கரண்டி நறுக்கிய பிஸ்தா
 • உப்பு தேவையான அளவு
 • பட்டர் பேப்பர் தேவையான அளவு

How to make முட்டை இல்லாத ரவை கேக்

 • முதலில் மிதமான சூட்டில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் பாலை ஊற்றி சுட வைத்து வைத்துக் கொள்ளவும்.
 • இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 • பின்பு இந்த கலவையுடன் அரை கப் தயிரை கட்டியில்லாமல் நன்றாக அடித்து சேர்க்கவும்.
 • அடுத்து காய்ச்சி வைத்துள்ள பால் மற்றும் வெண்ணெய்யை உருக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கலந்த பின் அதை 30 நிமிடங்களில் இருந்து 40 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வைக்கவும்.
 • மாவு ஊருவதற்குள் டூட்டி ஃப்ரூட்டி, cranberries, பாதாம், முந்திரி, மற்றும் பிஸ்தாவை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • 40 நிமிடங்களுக்கு பிறகு மாவை எடுத்து அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும். (மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.)
 • இப்பொழுது இந்த மாவுடன் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் டூட்டி ஃப்ரூட்டி, cranberries, பாதாம், முந்திரி, மற்றும் பிஸ்தாவை (சிறிது அளவு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்) சேர்த்து மெதுவாக கலக்கவும்.
 • இப்பொழுது ஒரு கேக் ட்ரேவை எடுத்து அதன் ஓரங்களில் வெண்ணெய்யை தடவி நடுவில் பட்டர் பேப்பரை வைத்து தயார் செய்து வைத்திருக்கும் கேக் கலவையை இதில் ஊற்றவும்.
 • இந்த கலவையை சமம் செய்த பின் மீதமுள்ள டூட்டி ஃப்ரூட்டி, cranberries, பாதாம், முந்திரி, மற்றும் பிஸ்தாவை அதன் மேலே தூவவும்.
 • அவனை pre heat செய்த பின் இந்த கேக் ட்ரேவை உள்ளே வைத்து 180 டிகிரியில் அவனை வைத்து சுமார் 30 நிமிடங்களில் இருந்து 40 நிமிடங்கள் வரை இதை வேக விடவும்.
 • 40 நிமிடங்களுக்கு பிறகு அவனை திறந்து கேக் ட்ரேவை எடுக்கவும். ஒரு ப்ளேட்டை ட்ரே மீது வைத்து டிரேவை திருப்பினால் கேக் சுலபமாக வந்து விடும்.
 • சிறிது நேரம் அதை ஆறவிட்டு பிறகு சிறு சிறு slice ஆக ஆக்கிக் கொள்ளவும்.
 • இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் பிரஷ்ஷான ரவா கேக் தயார்.
 • இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழ்ந்து இந்த இனிமையான கிறிஸ்மஸ் ஐ மேலும் இனிமை ஆக்குங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*