காலிஃப்ளவர் தம் பிரியாணி

By Praveen Kumar
காலிஃப்ளவர் தம் பிரியாணி ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் முதல் முறை சமைப்பவர்கள் கூட செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.

பிரியாணி என்றாலே குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறதை நாம் அனைவரும் அறிவோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவு பிரியர்கள் மட்டுமின்றி அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். அவ்வளவு பிரசித்தி பெற்றதாக இருக்கும் இந்த பிரியாணியில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு ஸ்பெஷல் வெரைட்டியான காலிஃப்ளவர் தம் பிரியாணி. என்ன இப்பொழுதே நாவில் எச்சில் ஊறி விட்டதா. உங்கள் நா சுவை அரும்புகளின் சுவையை தீர்ப்பது மட்டுமின்றி உங்கள் அறிவு பசியை போக்குவதற்க்கும் ஒரு சுவாரசியமான காலிஃப்ளவர் தம் பிரியாணியின் வரலாற்று குறிப்புகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்கவும்.

Cauliflower Biryani
Cauliflower Biryani

ஏன் நீங்கள் இதை வாசிக்க வேண்டும்:

பிரியாணி என்றால் பெரும்பாலும் பலரது வீட்டில் அது ஒன்று சிக்கன் பிரியாணியாக இருக்கும் இல்லை மட்டன் பிரியாணியாகத்தான் இருக்கும். சைவ பிரியர்கள் என்றால் அது வெஜிடபிள் பிரியாணி ஆக இருக்கும் அல்லது மஷ்ரூம் பிரியாணியாக இருக்கும். நாம் வழக்கமாக செய்து சுவைக்கும் பிரியாணிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இந்த காலிஃப்ளவர் தம் பிரியாணி நிச்சயம் இருக்கும். இதை கட்டாயம் செய்து பார்த்து இவை எவ்வாறு இருந்தது என்று எங்களிடமும் கமெண்ட் செக்ஷனில் பகிருங்கள்.

ஏன் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்:

காலிஃப்ளவர் தம் பிரியாணி செய்ய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃபிளவர், பச்சை பட்டாணி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி கொண்டு நாம் தயாரிக்கும் காய்கறி மசாலா கலவை நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியுடன் நன்கு ஒன்றோடு ஒன்று வெந்து மிக அற்புதமாக இருக்கும்.

சில குறிப்புகள்:

காலிஃப்ளவரை நறுக்கியவுடன் கொதிக்கும் தண்ணீரில் பத்து நிமிடம் போட்டால் அதில் ஏதேனும் புழுக்கள் இருந்தால் அது மடிந்து விடும்.

பாசுமதி அரிசியை வேக வைக்கும் தண்ணீரில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

பாசுமதி அரிசியை அடுப்பில் இருந்து இறக்குவதற்க்கு முன்பாக அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு எலுமிச்சை சாறை சேர்த்தால் சாதம் நன்கு மிருதுவாக இருக்கும்.

இவ் உணவின் வரலாறு:

பிரியாணி தென்னாசியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பிரியாணி பெரிசியன் புலாவில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவை முகலாயர் படையெடுப்பின்போது இந்திய சமையல் முறைக்குள் நுழைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்தியாவில் உள்ள பல சமையல் முறைக்கேற்ப்ப பிரியாணியில் சிறு சிறு மாற்றங்களை செய்து மக்கள் சுவைத்து வருகின்றனர்.

செய்யும் நேரம், பரிமாறுதல், மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:

காலிஃப்ளவர் தம் பிரியாணி செய்ய தயாரிப்பு பணிகள் சுமார் 15 லிருந்து 20 நிமிடம் பிடிக்கும்.

இதை சமைக்க சுமார் 50 லிருந்து 55 நிமிடம் எடுக்கும்.

காலிஃப்ளவர் தம் பிரியாணியை முழுமையாக சுமார் 70 நிமிடத்தில் இருந்து 75 நிமிடத்திற்க்குள் செய்து முடித்து விடலாம்.

இதை சுமார் மூன்றில் இருந்து நான்கு பேர் வரை தாராளமாக சாப்பிடலாம்.

காலிஃப்ளவர் தம் பிரியாணியை சுமார் ஒரு நாள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுடவைத்து உண்ணலாம்.

இதை ஒற்றிய உணவுகள்:

இந்த உணவில் இருக்கும் சத்துக்கள்:

காலிஃப்ளவர் தம் பிரியாணியில்  சேர்க்கப்படும் பாசுமதி அரிசியில் புரத சத்து, நார் சத்து, மற்றும் இரும்பு சத்து உள்ளது.

இதில் நாம் உபயோகிக்கும் காலிஃப்ளவரில் நார் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் C, K, மற்றும் B6 உள்ளது.

நாம் இதில் சேர்க்கும் வேகவைத்த பச்சை பட்டாணி புரத சத்து, நார் சத்து, விட்டமின் K மற்றும் A உள்ளது.

இதில் நாம் பயன்படுத்தும் தக்காளியில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், விட்டமின் C மற்றும் K உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தை கூட்டவும் மற்றும் கேன்சர் வரும் அபாயத்தை குறைக்கும்.

இதில் நாம் பயன்படுத்தும் வெங்காயத்தில் நார் சத்து, புரத சத்து, தண்ணீர் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த, மற்றும் எலும்பு திடத்தை அதிகரிக்க உதவுகிறது.

இதில் நாம் சேர்க்கும் பூண்டில் புரத சத்து, மேங்கனீஸ், விட்டமின் C, மற்றும் B6 இருக்கிறது. இவை ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Cauliflower Biryani
No ratings yet

காலிஃப்ளவர் தம் பிரியாணி

காலிஃப்ளவர் தம் பிரியாணி ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான உணவு. இதை எந்தவித சிரமமும் இன்றி வெகு எளிதில் முதல் முறை சமைப்பவர்கள் கூட செய்து முடித்து விடலாம். இவை சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.
Prep Time20 minutes
Cook Time55 minutes
Total Time1 hour 15 minutes
Course: Main Course
Cuisine: Tamil Nadu

தேவையான பொருட்கள்

  • 1 cup பாசுமதி அரிசி
  • 1 முழு காலிஃப்ளவர்
  • 1 cup பச்சை பட்டாணி
  • 2 தக்காளி
  • 1 1/2 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 8 பல் பூண்டு
  • 1 சிறு துண்டு இஞ்சி
  • 1 cup தயிர்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 4 tsp மிளகாய் தூள்
  • 2 tsp மல்லி தூள்
  • 1 tsp கசூரி மேத்தி
  • 1 tsp சீரக தூள்
  • 2 tsp கரம் மசாலா
  • 1/2 tsp எலுமிச்சை சாறு
  • 15 tsp குங்குமப்பூ பால்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு புதினா
  • தேவையான அளவு கொத்தமல்லி
  • தேவையான அளவு நெய்
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • அடுத்து காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை நறுக்கி, பச்சை பட்டாணியை உறித்து, மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சாதம் வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
  • தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைக்காண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை சுமார் 90 சதவீதம் அளவிற்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • எண்ணெய் சுட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்திலிருந்து அரை வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி, மற்றும் ரெண்டு மேஜைகரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காலிஃபிளவர், மற்றும் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
  • அடுத்து அதில் ஒரு கையளவு நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் வெங்காயம், புதினா, மற்றும் கொத்தமல்லியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் பத்து நிமிடம் வரை ஊற விடவும்.
  • இப்பொழுது சுமார் 15 மேஜைகரண்டி அளவு சுடவைத்த பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பத்து நிமிடத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
  • நெய் சுட்டதும் அதில் நாம் ஊற வைத்திருக்கும் காய்கறி கலவைகளை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும். (உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்).
  • 15 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு கிளறி விட்டு அந்த காய்கறி கலவையிலிருந்து பாதியை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அந்த பாத்திரத்தில் இருக்கும் காய்கறி கலவையை நன்கு சமம் செய்து நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியில் இருந்து பாதியை எடுத்து அதில் போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் சாதம் உடைந்து விடாமல் பக்குவமாக சமம் செய்யவும்.
  • பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு நெய், நாம் தயார் செய்து வைத்திருக்கும் குங்குமப்பூ பாலில் இருந்து பாதி, ஒரு கை அளவு வறுத்த வெங்காயம், புதினா, மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும்.
  • அதைத்தொடர்ந்து அதன் மேலே நாம் கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் காய்கறி கலவைகளை சேர்த்து அதை நன்கு பரப்பி விடவும்.
  • அடுத்து அதன் மேலே மீதம் உள்ள பாசுமதி அரிசியை போட்டு அதை சமம் செய்து அதன் மேலே ஒரு மேஜைகரண்டி அளவு நெய், மீதமுள்ள குங்குமப்பூ பால், வறுத்து வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, மற்றும் புதினாவை தூவி விடவும்.
  • பின்பு அதன் மேலே ஒரு மூடி போட்டு அதை சுமார் 15 நிமிடம் வரை வேக விடவும்.
  • 15 நிமிடத்திற்க்கு பிறகு மூடியை திறந்த ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக சாதம் உடைந்து விடாமல் அதை கிளறி விடவும். அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான காலிஃபிளவர் தம் பிரியாணி ரெடி.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்:

காலிஃப்ளவர் தம் பிரியாணியை இன்னும் ஸ்பைசியாக ஆக்குவது எப்படி?

நீங்கள் காரத்தை விரும்புபவர் என்றால் உங்கள் காரத்திற்க்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மேஜைகரண்டி அளவு மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

காலிஃப்ளவர் தம் பிரியாணி செய்ய நாம் பயன்படுத்தும் பாசுமதி அரிசிக்கு பதிலாக சீரக சம்பா அரிசியை பயன்படுத்தலாமா?

உங்களுக்கு சீரக சம்பா அரிசி பிடிக்கும் என்றால் தாராளமாக நீங்கள் சீரக சம்பா அரிசியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலிஃப்ளவர் தம் பிரியாணிக்கு உகந்த சைடிஷ்கள் என்னென்ன?

இவை வெறும் வெங்காய ரைத்தா உடனே படு டேஸ்ட் ஆக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு கூடுதலாக சைடிஷ் வேண்டும் என்றால் பன்னீர் பட்டர் மசாலா, மஷ்ரூம் மஞ்சூரியன், பன்னீர் டிக்கா, பன்னீர் 65 போன்ற சைடிஷ்கள் நன்றாக இருக்கும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் சிக்கன் மஞ்சூரியன், சில்லி சிக்கன் போன்ற சைடிஷ்கள் அட்டகாசமாக இருக்கும்.

Praveen Kumar

Praveen Kumar is the Chief Food Officer at Awesome Cuisine, a platform created in 2008 to showcase India's vibrant culinary heritage. Praveen is a passionate foodie and love to cook. Having spent a few years in the retail fast food world, Praveen has been exploring the world of food since his school days. Join him on a flavorful journey.

Leave a Comment